பத்து தல
பத்து தல

சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும்?

நடிகர் சிம்பு நடிப்பில் உருவான ‘பத்து தல’ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் உலகம் முழுவதும் 55 கோடி வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.

நடிகர் சிம்பு ஒபேலி கிருஷ்ணா இணைந்து பணியாற்றிய பத்து தல திரைப்படம் கடந்த மார்ச் 30ஆம் தேதி தமிழக முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படம் முதல் நாளில் மட்டும் 13 கோடி ரூபாய் வசூலை படைத்தது.

கௌதம் கார்த்திக், ப்ரியா பவானிசங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், கலையரசன், டிஜே, அனுசித்ரா உள்ளிட்ட பலர்இப்படத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தைஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

‘நெடுஞ்சாலை’, ‘சில்லுனு ஒரு காதல்’, படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஓபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த மார்ச் 30-ம் தேதிதிரையரங்குகளில் வெளியான படம் ‘பத்து தல’. நடிகர் சிம்புவுக்கு மாநாடு, வெந்துத் துணிந்தது காடு ஆகிய திரைப்படத்திற்கு பிறகு பத்து தல திரைப்படமும் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து உள்ளது .முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 27ஆம் தேதி ’பத்து தல’ திரைப்படம் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இந்த தகவலை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

தமிழகத்தில் மட்டும் சுமார் 26 கோடி ரூபாய் வசூலை பத்து தல திரைப்படம் பெற்றது. இன்னும் தமிழகத்தில் சில திரையரங்குகளில் பத்து தலதிரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பத்து தலதிரைப்படத்தின் ஓ டி டி ரிலீஸ் வரும் ஏப்ரல்27 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ பத்து தல திரைப்படம் வெளியாகி OTT ரசிகர்கள் மத்தியில் அதே வரவேற்பினை பெறுமா? பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com