இளைஞர்களைக் கவருமா? ‘கடைசி காதல் கதை’ !

இளைஞர்களைக் கவருமா? ‘கடைசி காதல் கதை’ !

ஒரு திரைப்படம் இளைஞர்களுக்குப் பிடித்துவிட்டால் அது படம் மிகப் பெரிய வெற்றி பெறுவது உறுதி. அப்படிப்பட்ட ஒரு படமாக சமீபத்தில் வெளியான பாடம் ‘லவ் டுடே’. அறிமுக நடிகர்கள் நடித்து மிகப் பெரிய வரவேற்பு பெற்ற அப்படத்தைத் தொடர்ந்து, இளைஞர்களை வெகுவாக கவரக்கூடிய படமாக உருவாகியுள்ள படம் ‘கடைசி காதல் கதை’.

முழுக்க முழுக்கப் புதுமுகங்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் கதை வித்தியாசமாக இருப்பதோடு, அதற்கு திரைக்கதை அமைத்து காட்சிகளை கையாண்ட விதமும் இளைஞர்களை கவரக்கூடிய விதத்தில் இருக்கும் என்கிறார்கள் படக் குழுவினர்.

காதல் தோல்வியால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் இளைஞர்கள் எடுக்கும் தவறான முடிவுகளை வித்தியாசமாக இயக்குநர் கையாண்டிருக்கிறார். இளைஞர்களும், காதலர்களும் கொண்டாடும் வகையில் படம் இருக்கும் என்கிறார்கள் மீடியேட்டர்கள்.

படம் மிகவும் ஜாலியாக இருப்பதாகவும், இளைஞர்களைக் கொண்டாட வைக்கும் படமாக ‘கடைசி காதல் கதை’ உருவாகியுள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. இறுதியில் காதலர்களுக்கு மட்டும் இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மெசஜ் ஒன்றையும் இயக்குநர் சொல்லியிருக்கிறாராம்.

படத்தில் சொல்லப்படும் மையக் கரு இதுவரை எந்த படத்திலும் இடம்பெறாத ஒரு விஷயமாக இருப்பதோடு, விபரீதமானதாகவும் இருக்கிறதாம். ஆனால், அதை நுட்பமாகக் கையாண்ட இயக்குநர் ஆர்.கே.வித்யாதரனின் திரைக்கதை, வசனம் மற்றும் காட்சி அமைப்புகள் அனைத்தும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வதோடு, இறுதியில் அனைத்துக்குமான தீர்வாகச் சொல்லப்படுவது காதலர்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து தரப்பினருக்குமானதாக இருக்கிறது என்கிறார்கள் படத் தயாரிப்பைச் சேர்ந்தவர்கள்.

அறிமுக நடிகர் ஆகாஷ் பிரேம்குமார், அறிமுக நடிகை ஈனாக்ஷி கங்குலி, நடித்திருக்கும் இப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் விஜே ஆஷிக், நோபல், மைம் கோபி, சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ், அனு, பிரியதர்ஷினி, முதுன்யா, நிஷார், ஸ்வப்னா, கிருத்திகா எனப் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

எஸ்.கியூப் பிக்சர்ஸ் சார்பில் ஈ.மோகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு சேத்தன் கிருஷ்ணா இசையமைக்க, சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.ஆர்.பிரகாஷ் படத்தொகுப்பு செய்ய, கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.கே.வித்யாதரன் இயக்கியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com