தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளத்தில் ஆண்களை விட பெண்களுக்கே ஊதியம் அதிகம்: ரவீனா டாண்டன்!
பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் சமீபத்தில் மன் கி பாத் @100 இன் தேசிய மாநாட்டின் குழுவில் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சியில் பேசும்போது அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட விஷயம் ஒன்று இன்றைய தேதிக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், திரைப்படத் துறையுடன் ஒப்பிடும்போது, தொலைக்காட்சித் துறையில் ஆண்களை விட பெண்களுக்கு தற்போது அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்பதைப் பற்றி அவர் பேசினார். தொலைக்காட்சித் துறையைப் பின்பற்றி திரையுலகமும் மெல்ல மெல்ல தன்னை மாற்றிக் கொண்டு திறமை அடிப்படையில் பெண்களுக்கு அதிக ஊதியத்தை தர முயற்சிக்கும் எனத் தான் நம்புவதாகவும் அவர் அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார்.
மேற்கூறிய விஷயத்தைத் தவிர, பெண்கள் இந்தியத் தொலைக்காட்சியை எப்படி ஆள்கிறார்கள் என்பதையும் OTT தளங்களில் பெண்களைப் பற்றிய பல விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன என்பதையும் கூட ரவீனா குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில், ரவீனா டாண்டன் பேசுகையில்,
திரைப்படத்துறை என்பது முற்றிலும் ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த களம். அங்கு இன்று ஊதிய ஏற்றத்தாழ்வு பற்றி பேசுகிறோம், ஆனால், இன்று திரைப்படத்துறையை விட தொலைக்காட்சித் துறையில் பெண்கள் அதிகமும் மதிக்கப்படுகிறார்கள். அங்கு அவர்கள், தங்களது ஆண் நாயகர்களை விட அதிக ஊதியம் பெறுகிறார்கள். அவர்கள் செய்யும் வேலையை அடிப்படையாகக் கொண்டு திறமையின் காரணமாக கிடைத்த அந்த அங்கீகாரத்தை பெரிய முன்னேற்றம் என்று நான் நினைக்கிறேன். தொலைக்காட்சித் துறையில் இப்போது பெண்களின் ஆட்சி நடக்கிறது. ஓடிடி தளங்களிலும், பெரும்பாலும் பெண்கள் மற்றும் பெண்களின் பலதரப்பட்ட பிரச்சனைகள் குறித்தே விவாதிக்கப்படுகின்றன. தொலைக்காட்சி மற்றும் ஓடிடி துறையில் அடைந்த வெற்றிகளைப் போலவே மெல்ல மெல்ல திரையுலகிலும் பெண்களாகிய நாம், ஆண்களுக்கு இணையான, ஊதியம் மற்றும் அங்கீகாரம் போன்ற விஷயங்களில் நமது இலக்கினை அடைவோம். ஆண்களின் கோட்டையான திரையுலகில் கண்ணாடிக் கூரையை உடைத்துக் கொண்டு எல்லாவற்றிலும் நாங்கள் உள்ளே நுழைந்திருக்கிறோம். நிச்சயம் ஒரு மாற்றம் வரவிருக்கிறது.
"எனது பணி அங்கீகரிக்கப்பட்டதற்கும், இன்று நான் தேசத்தின் முன் கௌரவிக்கப்படுவதற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன். இது உண்மையில் ஒரு அழகான உணர்வு. இன்று என் அப்பா (ரவி டாண்டன்) நிச்சயமாக இதைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." என்றார்.
ரவீனாவின் சமீபத்திய திரைப்பங்களிப்பைப் பொறுத்தவரை, அவர் ஆரண்யக் 2 மற்றும் பாட்னா சுக்லாவை தனது பைப்லைனில் வரிசைப்படுத்தியுள்ளார்.