ஆஹா... இது ரஜினியா? இதுவரை பலரும் பார்த்திராத ரஜினியின் சபரிமலை வீடியோ!

ஆஹா... இது ரஜினியா? இதுவரை பலரும் பார்த்திராத ரஜினியின் சபரிமலை வீடியோ!

சூப்பர் ஸ்டார் என்றாலே உலகளவும் எல்லாராலும் அறியப்படுபவர் ரஜினிகாந்த். 1975ல் கே.பாலசந்தரின் 'அபூர்வ ராகங்கள்' படத்தில் அறிமுகமான இவர், தொடக்கத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துவந்துள்ளார். பின்னர், 'சிலக்கம்மா செப்பிந்தி' என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோவாக முதன்முதலாக நடித்தார்.

திரைக்கு வந்து சில வருடங்கள் மட்டுமே கடந்த நிலையில், 1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பைரவி' திரைப்படத்தில் முதன்முதலாக அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டமும் கிடைத்தது.

அன்று முதல் இன்று வரை அந்த பட்டத்திற்குரிய ஒரே நபர் அவர் மட்டும்தான் என்று எல்லோராலும் சொல்லுமளவுக்கு இன்றளவும் சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் இடம்பிடித்து உள்ளார்.

கையை தூக்கினால் ஒரு ஸ்டைல், நடந்தால் ஒரு ஸ்டைல், முறைத்தால் ஒரு ஸ்டைல் என இன்ச் பை இன்ச்சாக மக்கள் அவரை ரசிக்க ஆரம்பித்தார்கள். அதனாலேயே அவரை நேரில் பார்த்தாலும், வீடியோவில் பார்த்தாலும் ரசிகர்கள் அவரைக் கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அரிதான வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் ரஜினி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஐயப்பனை தரிசிக்க செல்லும் படி அமைந்துள்ளது. பழைய வீடியோவானாலும் சூப்பர் ஸ்டாரை மாலை அணிந்தபடி பார்க்கும்போது அனைவருக்கும் பூரிப்பு ஏற்படுகிறது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com