1 மில்லியன் பார்வைகளைக் கடந்த, யோகி பாபு ரசிக்கும் பேட் புகைப்படம்! யார்? எப்போது கொடுத்தது தெரியுமா?

1 மில்லியன் பார்வைகளைக் கடந்த, யோகி பாபு ரசிக்கும் பேட் புகைப்படம்! யார்? எப்போது கொடுத்தது தெரியுமா?

காமெடி நடிகர்களில் முன்னணி இடத்தில் இருக்கும் நடிகர் யோகி பாபு, தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தல தோனி பரிசாக வழங்கிய பேட்டை ரசித்துப் பார்க்கும்படியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள நிலையில், தற்போது அது 1 மில்லியான் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் காமெடியில் தனக்கென்று தனி முத்திரை பதித்து மக்கள் மனதில் பல நடிகர்கள் நீங்கா இடம் பெற்று வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது, முன்னணியில் இருக்கும் காமெடி நடிகர்களில் ஒருவராக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் யோகி பாபு.

இவரது ஒவ்வொரு படத்திலும் அவரது காமெடி காட்சிகள் அனைத்து தரப்பு ரசிகர்ளாகலும் கவரப்பட்டுவிடும். அதிலும், 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவையே லவ் செய்வதும், அவருடன் யோகி பாபு சேர்ந்து டூயட் பாடும் பாடல் என நடிப்பில் அசத்தியவர்.

சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் மாஸ் கிரிக்கெட் வீரரான தல மகேந்திர சிங் தோனியின் புதிய தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் (DEPL) என்ற நிறுவனத்தின் கீழ் உருவாகும் முதல் படத்தில் நடிகர் யோகி பாபுவும் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் நதியா, ஹாரிஷ் கல்யாண் உட்பட பலரும் நடிக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் இப்படத்திற்கான படப்பிடிப்பில் இருந்த போது, ​​தல தோனி, தனது நெட் பிராக்டீஸ் பேட்டை 'Best Wishes Yogi Babu' என்று தனது கையெழுத்தும் இட்டு யோகிபாபுவிற்கு பரிசாக அளித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் யோகிபாபு தலயின் பேட்டை கையில் வைத்து சுவாரஸ்யத்தோடு அதை ரசித்துப் பார்க்கும் புகைப்படத்தையும், தல தோனிக்கு நன்றி சொல்லி ஒரு வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பகிர்ந்துள்ள இந்த புகைப்படம் தற்போது 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com