புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி!

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி!

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். இவர் கன்னட சூப்பர் ஸ்டாரான நடிகர் ராஜ்குமாரின் ஐந்தாவது மகன் ஆவார். புனித் ராஜ்குமார் கடந்த வெள்ளிக் கிழமையன்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு புனித் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புனித் ராஜ்குமாரின் உடல் கண்டீரவா விளையாட்டு மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஏராளமான ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள் வந்திருந்து அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை (அக்டோபர் 31) அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன், நேற்று அவரது நினைவிடத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினார். அத்துடன் புனித்தின் அண்ணனும் கன்னட சினிமாவின் பிரபல நடிகருமான சிவ ராஜ்குமாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com