ரஜினி சொன்னா நடக்கும்!

ரஜினி சொன்னா நடக்கும்!

ஒரு சமயம், நியூயார்க் ‘பொங்கல் ரெஸ்டாரண்டு’க்கு 4000 டாலர் சம்பளத்துக்கு சீப் ஷெஃப்பா பணியாற்ற கூப்பிட்டாங்க. அப்போ ஹெச்1பி விசா வாங்கறது  ரொம்ப கஷ்டம்.

ரஜினிகிட்ட சொன்னேன். பொறுமையா கேட்டவர், உடனே “அமெரிக்கன் கவுன்சிலேட்டுக்குப் போங்க. அங்க ஒருத்தரை எனக்குத் தெரியும். நான் அவர்கிட்ட பேசறேன். உங்களுக்கு நான் கேரண்டி தரேன். விசா ரெடி பண்ணலாம்”னார்.

2001 ஜனவரி 15 – அமெரிக்கன் கவுன்சிலேட்டுல விசா இண்டர்வியூ. ஜனவரி 14ஆம் தேதி எங்கம்மா மைசூரில் இருந்து வரும்போது  ரயில் ஆக்ஸிடெண்டுல தவறிட்டாங்க. நான் அலறி அடிச்சுக்கிட்டு ஓடினேன். எல்லாம் முடிஞ்சு போச்சு. விசா இண்டர்வியூவும் போக முடியலை.

அம்மாவோட காரியங்களை முடிச்சுட்டு, மொட்டை போட்டுக்கிட்டு, பிப்ரவரி மாசம் வேலைக்கு வந்தேன். அன்னிக்கு ராத்திரி ரஜினி வந்தார். என்னால், விசா இண்டர்வியூவுக்குப் போக முடியலைங்கிறதை சொன்னேன். அவர் கண்ணு கலங்கிப் போச்சு. சட்டுன்னு சமாளிச்சுக்கிட்டு, “கவலையே படாதீங்க. India needs You… அதனாலதான் உங்க அம்மா உங்கள அமெரிக்கா போகவுடாம தடுத்திருக்காங்க...டோண்ட் வொரி”ன்னார்.

அந்த நல்ல மனசு, வாய் முகூர்த்தம் யாருக்கு வரும்? அதுக்கப்புறம் அமெரிக்கா வரச்சொல்லி, நாற்பதுக்கும் மேல ஆஃபர் வந்துது. இன்னி வரைக்கும் நான் போகல. ரஜினி சார் வாய் முகூர்த்தம் பலிக்காம போயிடுமா என்ன? இப்போ ஜாம்ஜாம்னு இருக்கேன்.

ரஜினி குடும்பம்
ரஜினி குடும்பம்

 ன்றும், பதினாலு வயசு பையனா நான் அவர் வீட்டுக்குப் போனது ஞாபகம் வருது. அப்போ எல்டாம்ஸ் ரோடு கார்னர்ல ‘சலூன் அம்புலி’ன்னு ஒரு கடை இருக்கும். அங்க சூப்பர் ஸ்டார் முடி வெட்டிக்க வருவாராம். நானும் அங்க முடி வெட்டிக்குவேன். நான் ரஜினியோட அதிதீவிர ரசிகன். அப்போ என்னோட ஆசையெல்லாம் ரஜினிகிட்ட ஆட்டோகிராஃப் வாங்கறதுதான். சலூன்காரர் என்னை, ரஜினி வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போனார். ரஜினி இல்லை. ஏதோ ஷூட்டுங். லதாம்மாதான் ஆட்டோகிராஃப் போட்டுத் தந்தாங்க. ரஜினி... A great soul!

பதினாலு வயசு பையனாக ரஜினி வீட்டுக்குப் போனவரும் சரி, இன்று ‘ஜாம்ஜாம்’னு இருப்பவரும் சரி சூப்பர் ஷெஃப் வெங்கடேஷ் பட்தான்!

போட்டி :

1. கல்கியில் தொடர்கதையாக வந்ததை தழுவி எடுத்த திரைப்படம்?

2. யானையுடன் படம் முழுதும் நடித்திருப்பார்... அந்தப் படத்தின் பெயர் என்ன?

3. ‘தாழம்பூவே வாசம் வீசு’ பாடல் இடம் பெற்ற திரைப்படம் எது?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com