
வருஷம் முழுக்கப் படங்கள் ரிலீஸ் ஆகிக்கொண்டே இருந்தாலும் தீபாவளி ரிலீஸுக்குப் மவுசு ஜாஸ்தி. பெரிய தலைகள் களத்தில் இறங்கிப் போட்டி போடும் ‘பாக்ஸிங் ரிங்’ அது. ரஜினியும் இறங்குகிறார்!
இந்த தீபாவளிக்குக்(1995) கிட்டத்தட்ட பத்து படங்கள் ரிலீஸ் ஆகின்றன. ரீ-ரெக்கார்டிங், சென்ஸார் போன்ற இறுதிக் கட்ட சடங்குகள் முடிவடைகிற வேகத்தைப் பொறுத்து இந்த எண்ணிக்கையில் சில கூடவோ குறையலோ செய்யலாம்.
பரபரப்பாக நாடு முழுதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் படம். ஆரம்பத்தில், மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘தேன்மாவின் கொம்பத்’ படத்தைத்தான் ரீ-மேக் செய்வதாகச் சொன்னார்கள். இடையே ஜெயலலிதாவால் ரஜினி வம்புக்கு (அதாவது அரசியலுக்கு) இழுக்கப்பட, படத்தில் நிறைய அரசியல் எஸென்ஸ் தெளிக்கப்பட்டிருப்பதாகக் கேள்வி. ஹீரோயின் யார் என்பது தெரிந்த சேதி. ரஜினியுடன் வெற்றிகரமாக மூன்றாவது முறையாக ஜோடி சேரும் ‘மகா பாக்கியம்’ அவருக்கு.
மூல – மலையாளக் கதையில் ஹீரோவுக்கு இணையாக – கனமான ரோலில் நெடுமுடி வேணு நடித்திருந்தார். இங்கே ஹீரோ ரஜினி என்பதால் இரண்டாவது ஹீரோவுக்குப் படத்தில் ஏது வாய்ப்பு?
ஆகவே, நெடுமுடி வேணு நடித்திருந்த ரோலில் நடிக்கக் கேட்டபோது, அரவிந்தசாமி, ராஜ்கிரண் இருவரும் சலாமிட்டு, மறுத்துவிட்டதாகப் பேச்சு. மெய்யாவா?
தொடர்ந்து வெற்றிப் படங்களாகத் தந்து கொண்டிருக்கும் பிரபலம்தான் இதன் இயக்குநர் என்பது விசேஷம். கூடுதல் விசேஷம் – இசையமைப்பாளரின் ஆஹா... ஓஹோ...!
பி.கு:- கண்டுபிடி... கண்டுபிடி!
கடலுக்கு அடியில் கிடைக்கும் விலை மதிப்பற்ற பொருள்தான் இப்படத்தின் தலைப்பு!
மகா பாக்கியம் கிடைத்த கதாநாயகி – இரண்டு எழுத்துப் பெயர் கொண்டவர்!
வெற்றி இயக்குனர் ‘நாட்டாமை’!
ஆஹா... ஓஹோ இசையமைப்பாளர்: ‘புயல்!’
1. இத்திரைப்படத்தில் சண்டைபோடுவதற்கு முன் prayer செய்துவிட்டு சண்டை போடும் படம்?
2. ரஜினி சிவன் வேஷத்தில் உலா வரும் திரைப்படம்?
3. "என் வழி தனி வழி" - இந்த வசனம் இடம்பெறும் படம்?