நாம் வாழும் இந்த வாழ்க்கைக்கு மாற்றாக அல்லது இணையாக ஒரு வாழ்க்கை இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஒன் லைனில் வந்துள்ள படம் அடியே.விக்னேஷ் கார்த்தி இப்படத்தை இயக்கியு ள்ளார்.
விபத்தில் சிக்கும் நம் ஹீரோவை, ஒரு விஞ்ஞானி டைம் லூப் எனப்படும் காலம் தாண்டி பயணம் செல்லும் ஆராய்ச்சிக்காக பயன் படுத்திகொள்கிறார். இதன் விளைவாக நம்ம ஹீரோ parallel universe எனப்படும் மாற்று உலகத்தில் வாழ்கிறான். இந்த உலகத்தில் ஹீரோ மிகப்பெரிய மியூசிக் டைரக்டராக இருக்கிறான். செந்தாழினி என்ற அழகான பெண் மனைவியாக இருக்கிறாள்.
இந்தியா -பாகிஸ்தான் ஒன்றாக இருக்கிறது. வாசிம் அக்ரமும், இம்ரானும் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுகிறார்கள். காராச்சி இந்தியாவில் இருக்கிறது. விஞ்ஞானியின் ஆராய்ச்சி முடிந்தவுடன், இதுவரை வாழ்ந்தது கற்பனை என்று யதார்த்ததை புரிய வைக்கிறார். ஆனால் ஹீரோ யதார்த்ததை புரிந்து கொள்ளாமல் செந்தாழினியை தேடி அலைகிறான். செந்தாழினிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது. இதிலிருந்து ஹீரோ மீண்டாரா? இல்லையா என்பதுதான் மீதிக்கதை.
படத்தின் முதல் பாதி ஒரு மாறுபட்ட படத்திற்கு வந்து விட்டோம் என்ற உணர்வை தருகிறது. இரண்டாவது பாதி இதை தக்க வைக்காமல் குழப்பத்தை தருகிறது. சயின்ஸ் பிக்சன் படத்தில் காதலை சொல்ல முயற்சி செய்து காதலை மட்டுமே சிறப்பாக சொல்லியிருக்கிறார் டைரக்டர். கௌரி கிஷன் நடிப்பிலும், முக உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் குஷ்பூ, ஜோதிகாவின் சாயல் தெரிகிறது. சரியான கதையை தேர்வு செய்து நடித்தால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோயினாக உருவாகலாம்.
காதல் காட்சிகளில் மிக நுணுக்கமான நடிப்பை தந்துள்ள்ளார். ஜி. வி பிரகாஷ் நடிப்பில் கொஞ்சம் பக்குவம் தெரிகிறது. ஏற்றுக்கொண்ட கேரக்டருக்கு தகுந்த நடிப்பை தர முயற்சி செய்துள்ளார்.வெங்கட் பிரபு சிரிப்புக்கு கி யராண்டி . ஒளிப்பதிவுவும் இசையும் ஒகே ரகம் தான். சயின்ஸ்க்காக இல்லாமல் காதலுக்குக்காக இந்த அடியேயை ரசிக்கலாம்.