அம்மு ஐஸ்வர்யா லெக்ஷ்மி
அம்மு ஐஸ்வர்யா லெக்ஷ்மி

'அம்மு' - குழப்புகிறாள்!

திரை விமர்சனம்!

நடிகர்கள் : ஐஸ்வர்யா லெக்ஷ்மி

நவீன் சந்திரா, பாபி சிம்ஹா,

இயக்குனர்: சாருகேஷ் சேகர்

இசை: பரத் சங்கர்

OTT தளம் : அமேசான் பிரைம்

இயக்குநர் சாருகேஷ் சேகர் இயக்கத்தில் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியானத் திரைப்படம் அம்மு. அம்முவாக வரும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, இத்திரைப்படத்தில் தனது அழகான அருமையான நடிப்பை வெளிப்படுத்தி விடுகிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் ரவீந்திரநாத் (நவீன் சந்திரா)வும் நன்றாகவே நடித்திருப்பார். இருவருக்கும் கதையில் தொடக்கத்திலேயே திருமணம் நடக்கிறது. ரொமான்ஸ், காதல் என அழகாக இருவரின் வாழ்க்கை செல்ல, ஒரு நாள் கணவனின் உண்மை முகம் தெரியா வருகிறது ஐஸ்வர்யா லெக்ஷ்மிக்கு . மனைவியை அடிப்பது புருஷ லட்சணம் என்ற மிதப்போடும் சுற்றும் ரவீந்திரநாத் தினமும் மனைவியை அடித்து துன்புறுத்துகிறார்.

அம்மு
அம்மு

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கணவனின் அடியால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலவீனமான அம்மு தனது கணவனுக்கு சரியான படத்தை கற்றுக்கொடுக்க காத்திருக்கிறாள்.

இந்த நேரத்தில், இரண்டு கொலை செய்த குற்றவாளி பிரபு (பாபி சிம்ஹா) தனது தங்கையின் திருமணத்தை பார்க்க பரோலில் வெளியில் வர, அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொள்ளும் அம்மு, பரோல் கைதியை தப்பவைத்து கணவனை பழிவாங்க திட்டம் தீட்டுகிறாள். அம்முவின் திட்டம் நிறைவேறியதா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

அம்மு
அம்மு

நன்றாக போகும் திரைக்கதை பாதிக்கு மேல் சோபிக்கவில்லை. ஐஸ்வர்யா லெக்ஷ்மிக்கு அதாவது அம்முவிற்கு கண்வனை பிரிய எத்தனையோ வழிகள் இருக்க பாபி சிம்ஹாவை தப்ப வைத்து பழிவாங்குவதெல்லாம் ரொம்பவும் சினிமாத்தனமாக இருக்கிறது. திரைக்கதை பல இடங்களில் சொதப்பலாக இயல்போடு ஒட்டாமல் இருக்கிறது. தற்கால பெண்கள் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவதாக வேண்டுமானால் எடுத்து கொள்ளலாம்.

உன் முடிவை நீ தான் எடுக்க வேண்டும் என்கிற கருத்துக்காக வேண்டுமானால் இயக்குனரை பாராட்டலாம் . பல இடங்களில் அம்முவோடு சேர்த்து இயக்குனரும் குழம்புகிறார். திரைக்கதை சற்று தெளிவாக எடுக்கப்பட்டிருப்பின் இது பெண்ணிய படங்களில் சிறந்த ஒன்றாக சேர்ந்திருக்கும். அம்மு ரொம்பவும் சொதப்புகிறாள், குழப்புகிறாள்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com