விமர்சனம்: 'ஆர் யூ ஒகே பேபி'

Are you ok baby movie
Are you ok baby movie

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில், இளையராஜா இசையில், மங்கி கிரியேடிவ் லேப் தயாரிப்பில் வெளி வந்துள்ள படம் ஆர் யூ ஒகே பேபி. திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் விங் டுகெதரில் வாழும் தம்பதிகளுக்கு  ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. வறுமை காரணமாக இந்த குழந்தையை, கேரளாவில் வாழும்  குழந்தை இல்லாத பணக்கார  கணவன் -மனைவிக்கு பணம் பெற்றுக்கொண்டு தத்து கொடுத்து விடுகிறார்கள் லிவிங் டு கெதர் தம்பதிகள்.

ஒரு வருடம் கழித்து தத்துக்கொடுத்த தாய்க்கு தன் குழந்தை மீண்டும் தனக்கு வேண்டும் என்று நினைக்கிறார். பல முயற்சிகள் செய்தும் முடியாமல் போக, பல்வேறு குடும்ப  பிரச்சனைகளுக்கு தனது "சொல்லாததும் உண்மை"   என்ற தொலைக்காட்சி லைவ் ஷோ மூலமாக நியாயம் வழங்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை அணுகுகிறார்.குழந்தையின் தாய் லக்ஷ்மி மிக எமோஷனலாக இந்த குழந்தையின் தாயை வைத்து நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார். ஆனால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

மாறாக காவல் துறை குழந்தை தத்து கொடுத்ததில் சட்ட மீறல் உள்ளது என்ற கோணத்தில் தத்து பெற்ற கேரள தம்பதிகள் மீது  வழக்கு பதிவு செய்து, குழந்தையை கைப்பற்றி சென்னையில் உள்ள காப்பாகத்தில் சேர்த்து விடுகிறது. நீதிமன்றம் இந்த வழக்கை எப்படி கையாளுகிறது என்ற அடிப்படையில் கதை நகர்கிறது.       

தான் நடத்திய ஒரு லைவ் ஷோவை கொஞ்சம் பெயர் மாற்றி, தான் இயக்கும் படத்திலயே எந்த வித சம ரசமும் செய்து கொள்ளாமல் உள்ளதை உள்ளபடி சொன்ன லக்ஷ்மி ராமகிருஷ்ணாவிற்க்கு பாராட்டுக்களை சொல்லி விடலாம். இது போன்ற குடும்ப பிரச்சனைகளை வைத்து நடத்தப்படும் ஷோக்கள் அனைத்தும் விளிம்பு நிலையில் உள்ள மக்களை மைய்யப்படுத்தியே நடக்கின்றன என்பதை நடு நிலையோடு சொல்லி இருக்கிறார் லக்ஷ்மி. படத்திலும் ஒரு நிஜ லைவ்  ஷோ நடுத்துபவராக நடித்துள்ளார். "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா "என சொல்லாததுதான் குறை. குழந்தையில்லா தம்பதிகளின் வலியையும், தத்து எடுப்பதில் உள்ள நடை முறை சிக்கல்களும் புரிய வைத்து விடுகிறார் இயக்குநர்.                 

எத்தனை செல்வங்கள் இருந்தாலும், குழந்தை செல்வங்கள் தான் மிகப்பெரிய செல்வம் என்பதை வசனங்களால் இல்லாமல் தனது நடிப்பால் உணர்த்தி விடுகிறார்கள் சமுத்திரக்கனி மற்றும் அபிராமி.ஒரு பக்கம் வறுமை,மறுபக்கம் தான் பெற்ற குழந்தை மீது என ஒரு மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார் முல்லையரசி.                   மனித உணர்வுகளுக்கு இசை வடிவம் தருவதில் தான் ஒரு ராஜாதான் என்பதை மீண்டும் உணர்த்தி இருக்கிறார் இளையராஜா. ராஜா சாரின் இசை எமோஷனலுக்கு வலு சேர்க்கிறது. தாய்மையின் அன்பையும், சில சட்ட சிக்கல்களையும், இந்த சிக்கல் கலையப்பட வேண்டிய அவசியத்தையும் சொல்கிறது 'ஆர் யூ ஒகே பேபி.'

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com