பனாரஸ்
பனாரஸ்

கங்கை கரையில் ஒரு காதல்! பனாரஸ்!

திரை விமர்சனம்

இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் காசி. இந்த காசியும் காசியில் ஓடும் புனித கங்கை நதியும் ஆன்மீகம் என்பதையும் தாண்டி நமது உணர்வுகளின் மைய்யமாக திகழ்கிறது என்று சொல்லும் படம் பனாரஸ். இந்த உணர்வை அழகான காதல் வழியே சொல்லியிருக்கிறார் டைரக்டர் ஜெயதீர்த்தா.

ஜையித் கான் மற்றும் சோனல் மோண்டோரியோ நடிகர் நடிகையாக அறிமுகமான முதல் படம் இது. கல்லூரி மாணவன் ஜையித் கான் விளையாட்டுக்காக சோனலிடம் பழகி நெருக்கமாக இருப்பதை போல ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விடுகிறார். இதனால் அவமானத்திற்கு ஆளாகும் சோனல் ஊரை விட்டு வெளியேறுகிறார்.

தன் தவறை உணர்ந்த ஜையித் கான் சோனலிடம் மன்னிப்பு கேட்க தேடி அலைக்கிறார். சோனல் வாரணாசியில் உள்ள பனாரஸில் இருப்பதை தெரிந்து கொண்டு அங்கே செல்கிறார்.

தன்னை மன்னிக்கும்படி வேண்டுகிறார். சோனல் ஜையித் கானை மன்னிக்க மறுக்கிறார். அதன் பிறகு நடக்கும் விஷயங்களை டைம் ட்ராவல், காதல் என்று சொல்லியிறுக்கிறார் இயக்குனர்.

ஜையித் கான்  - சோனல் மோண்டோரியோ
ஜையித் கான் - சோனல் மோண்டோரியோ

படம் நகர்வதில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும் கங்கை நதியின் பின் புலத்தில் சொல்லப்படும் காதல் நம்மை ரசிக்க வைக்கிறது. ஜையித் கான் தவறை உணர்ந்து வருந்தும் போதும், உளவியல் ரீதியான பிரச்சனையில் சிக்கி தவிக்கும் போதும் நடிப்பால் நம்மை கவர்கிறார்.

காதலையும், ஆற்றாமையும் கலந்த நடிப்பை தந்துள்ளார் சோனல். ஸாம்புவாக நடிக்கும் சுஜய் சாஸ்திரியின் நடிப்பு ஒரு சித்தரை போல உள்ளது.

காசியில் உள்ள டெத் photography யாரும் சொல்லாத விஷயம். "நான் செஞ்சதுதான் சரின்னு சண்டை போடுற வன் தைரியசாலி கிடையாது. தான் செஞ்ச தப்பை ஓத்துக்கிட்டு மன்னிப்பு கேட்கிறவன்தான் தைரியசாலி "என்ற வசனம் ஆழமாக மனதில் பதிவாகுகிறது .

குருமூர்த்தி ஒளிப்பதிவில் வேத மந்திரங்கள் முழங்க கங்கையை ஆராதனை செய்யும் காட்சி அற்புதம். கங்கையும் காசியும் பாவங்களை போக்குவது மட்டுமில்லாமல் நமது தவறுகளை உணர்வதுதற்கும் தான் என்பதை இப்படம் சொல்கிறது.

நீங்கள் எந்த மதமாக வேண்டுமானாலும் இருக்கலாம். பனாரஸ் படம் பார்த்தால் காசியையும், கங்கையையும் காண வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் ஏற்படும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com