காபி வித் காதல்! ஆறிப்போன காபி!

திரை விமர்சனம்!
காபி வித் காதல்
காபி வித் காதல்

யார் எப்படி படம் எடுத்தாலும் நான் இப்படித்தான் படம் எடுப்பேன் என்று பிடிவாதமாக சுந்தர். சி பிடிவாதமாக எடுத்துள்ள படம் தான் காபி வித் காதல்.

பிரதாப் போத்தனுக்கு மூன்று மகன்கள் ஒரு மகள்.திருமணமான முதல் மகன் ஸ்ரீகாந்த்திற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. இந்த பெண்ணை தம்பி ஜீவாவிற்கு நிச்சயம் செய்கிறார்கள்.ஜீவாவும், மாளவிகா சர்மாவும் காதலிக்கிறார்கள். மாளவிகா சர்மாவை இன்னொரு தம்பி ஜெய்க்கு நிச்சயம் நிச்சயம் செய்கிறார்கள். அமிர்தா ஜெய்யை காதலிக்கிறார்.இதன் நடுவில் ஜீவா லிவிங் டுகெதரில் இருந்த பெண் ஒருவர் வந்து சேர்கிறார். யார் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார்கள்.

காபி வித் காதல்
காபி வித் காதல்

தயவு செஞ்சு யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு படத்தை முடிங்கப்பா என்று சொல்ல வைக்கிறார்கள்.குழப்பதை வைத்து நகைச்சுவை செய்ய முயற்சித்து இருக்கிறார். ஆனால் சிரிப்பே வரவில்லை. யோகிபாபு கிங்ஸ்லி வரும் காட்சிகள் பரவாயில்லை. இப்படத்தில் நடித்த நடிகர்களில் பலர் இதன் முன்பே பல படங்களில் சிறப்பாக நடித்துள்ளதால் இந்த படத்தில் நடிப்பு என்று சொல்லிகொள்ளும் படி நடிப்பு எதுவும் இல்லை. யுவனின் இசை கேட்கலாம் ரகம்.

படத்தின் ஒரே ஆறுதலான விஷயம் ,படம் முடிந்த பிறகு பம் பம் பம் ஆரம்பம் பாடலும், பாடலுக்கு ஆடும் நடனம் தான். சுந்தர். சி சார் கொஞ்சம் வேற லெவெலில் உங்ககிட்ட எதிர்பார்க்கிறோம்.. காபி வித் காதல் ஆறிப்போன காபி

காபி வித் காதல்! ஆறிப்போன காபி!

திரை விமர்சனம்!

யார் எப்படி படம் எடுத்தாலும் நான் இப்படித்தான் படம் எடுப்பேன் என்று பிடிவாதமாக சுந்தர். சி பிடிவாதமாக எடுத்துள்ள படம் தான் காபி வித் காதல்.

பிரதாப் போத்தனுக்கு மூன்று மகன்கள் ஒரு மகள்.திருமண மான முதல் மகன் ஸ்ரீ காந்த்திற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. இந்த பெண்ணை தம்பி ஜீவாவிற்கு நிச்சயம் செய்கிறார்கள்.ஜீவாவும் மாளவிகா சர்மாவும் காதலிக்கிறார்கள். மாளவிகா சர்மாவை இன்னொரு தம்பி ஜெய்க்கு நிச்சயம் நிச்சயம் செய்கிறார்கள்.அமிர்தா ஜெய்யை காதலிக்கிறார்.இதன் நடுவில் ஜீவா லிவிங் டுகெதரில் இருந்த பெண் ஒருவர் வந்து சேர்கிறார். யார் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார்கள்.

தயவு செஞ்சு யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு படத்தை முடிங்கப்பா என்று சொல்ல வைக்கிறார்கள்.குழப்பதை வைத்து நகைச்சுவை செய்ய முயற்சித்து இருக்கிறார். ஆனால் சிரிப்பே வரவில்லை. யோகிபாபு கிங்ஸ்லி வரும் காட்சிகள் பரவாயில்லை. இப்படத்தில் நடித்த நடிகர்களில் பலர் இதன் முன்பே பல படங்களில் சிறப்பாக நடித்துள்ளதால் இந்த படத்தில் நடிப்பு என்று சொல்லிகொள்ளும் படி நடிப்பு எதுவும் இல்லை. யுவனின் இசை கேட்கலாம் ரகம்.

படத்தின் ஒரே ஆறுதலான விஷயம் ,படம் முடிந்த பிறகு பம் பம் பம் ஆரம்பம் பாடலும், பாடலுக்கு ஆடும் நடனம் தான். சுந்தர். சி சார் கொஞ்சம் வேற லெவெலில் உங்ககிட்ட எதிர்பார்க்கிறோம்.. காபி வித் காதல் ஆறிப்போன காபி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com