கஸ்டடி விமர்சனம்: தமிழர்களுக்கான ஆந்திரா மீல்ஸ்!

கஸ்டடி விமர்சனம்: தமிழர்களுக்கான ஆந்திரா மீல்ஸ்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா, கீர்த்தி ஷெட்டி, சரத்குமார், பிரேம்ஜி நடித்து தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் வந்துள்ள படம் கஸ்டடி.  போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் சிவா (நாகசைதன்யா) எதிர் பாராதவிதமாக ராஜு என்ற குற்றவாளி யை யையும் (அரவிந்த  சாமி )   ஒரு சிபிஐ அதிகாரியையும் கைது செய்து லாக் அப்பில் வைக்கிறார். சிபிஐ அதிகாரியை உயர் போலீஸ் அதிகாரிகள்  முதல்வர்  உத்தரவின் பெயரில்  கொல்ல பார்க்கிறார் கள்.   இந்த இருவரையும் மற்ற போலீஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்டு  காப்பாற்றி ராஜுவையும், சி பி ஐ அதிகரியையும் அழைத்து தப்பிக்கிறார் சிவா. மறுநாள் காலையில் ராஜுவை பெங்களூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்து முதல்வர் செய்த தவறுகளுக்காக தண்டனை வாங்கி தர சி பி ஐ முயற்சிப்பதை தெரிந்து கொள்கிறார். நீதிமன்றத் திற்கு அழைத்து செல்லும் வழி யில் ஏற்படும் பிரச்சனைகள் தான் படம்.         

இது வழக்கமான வெங்கட்பிரபு படம் போல் இருக்காது என்றார்கள் படக்குழுவினர். இது வழக்கமான வெங்கட் பிரபு படம் இல்லை தான். மாறாக நாம் பார்த்து பழகிய ஆந்திரா மசாலா படம் போல் இருக்கிறது. பல பேர் பல துப்பாக்கிகளால் சுட்டும்,  ஹீரோ மீது ஒரு புல்லட் கூட பாயாதது , பல பேர் வெட்டினாலும் எழுந்து வரும் வில்லன், பறக்கும் கார்கள், ரத்தம், ஹீரோவை பெண் பார்க்க வந்து பின்னால் சுற்றும்  அசட்டு காமெடியன் என பல அம்சங்களை சொல்லிக்கொண்டே போகலாம். சேசிங் கதைக்கான விருவிருப்பு  குறைவாகவே உள்ளது.                       

நாகசைதயாவின் நடிப்பில் உடல் மொழி நன்றாகவே உள்ளது. முக பாவனைகளில் இன்னமும் ஒரு சாக்லேட் பாயின் சாயல் உள்ளது. கீர்த்தி ஷெட்டி க்யூட் ஷெட் டியாக நல்ல நடிப்பை தந்துள்ளார். தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தினால் ஒரு கை பார்க்கலாம். ஒரு தாதாவாக அரவிந்த் சாமி மிரட்டவும் நடிக்கவும் செய்கிறார்.பிரேம்ஜி செய்யும் காமெடியை விட வில்லன் அரவிந்த் சாமி அவ்வப்போது பேசும் டயலாக்கில் சிரிப்பு வருகிறது.   ஒரு முதல்வராக பிரியாமணி பல பெண் அரசியல் வாதிகளை நினைவுபடுத்துகிறார்.             

                                                                     போலீஸ் ஸ்டேஷன், வீடு, என பல லொகேஷன்களில் ஆர்ட் டைரக்டரின் உழைப்பு தெரிகிறது. யுவன் மற்றும் இளையராஜாவின் இணைந்த இசையில் பாடல்கள் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கலாம். படத்தின் இறுதியில் வரும் விடிய விடிய  நடனம் பாடலின் ரீமிக்ஸ் நன்றாக உள்ளது. கஸ்டடி படம் வெங்கட்டின் சாயலில் வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். கஸ்ட்டடி -தேவை பரபரப்பு.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com