தமிழ்க்குடிமகன் திரைப்படம் விமர்சனம்!

தமிழ்க்குடிமகன் திரைப்படம்
தமிழ்க்குடிமகன் திரைப்படம்

சாதி என்ற கட்டமைப்பே செய்யும் தொழிலை வைத்து உருவாக்கப்பட்டது என்ற கருத்து உண்டு. தன்  சாதி சார்ந்த தொழிலை செய்ய மறுக்கும் ஒருவன்  சந்திக்கும் பிரச்சனைகளை மைய்யமாக வைத்து உருவாகி உள்ள படம் தமிழ்க்குடிமகன்.

இசக்கி கார்வண்ணன் இப்படத்தை இயக்கி உள்ளார். ஊரில் உள்ளவர்கள் யாரேனும் இருந்தால் இறந்தவர்களுக்கு ஈமசடங்குகள் செய்யும் பரம்பரை  தொழிலை செய்து வருபவன் சின்ன சாமி. (சேரன்) அரசு வேலைக்கு முயற்சித்து வருகிறார். ஊரில் உள்ள பெரிய வீட்டில் ஒருவர் இறந்து விடுகிறார்.அந்த இறந்தவரின் ஈமசடங்குகளை செய்ய மறுத்து விடுகிறார் சின்ன சாமி. இதனால் இறந்தவரின் குடும்பத்தினர் பகைக்கு ஆளாகிறார். ஆத்திரம் கொண்ட இறந்தவரின்  மகன் (லால் )சின்ன சாமியின் குடும்பத்தை அழிக்க நினைக்கிறார்.

சின்னசாமி நீதிமன்றதை நாடுகிறார். நீதி மன்றம் இந்த பிரச்சனைக்கு  ஒரு மாறுபட்ட தீர்ப்பை தருகிறது. இது என்ன தீர்ப்பு?சாதி மீதான அழுக்கை எப்படி துடைப்பது என்பதை நீதிமன்ற தீர்ப்பின் வழியாக சொல்லமுயற்சித்து இருக்கிறது தமிழ்க்குடிமன் திரைப்படம்.

படத்தில் தேவையற்ற காமெடி,சண்டைகாட்சிகள், இல்லாமல் எடுத்துகொண்ட கதை களத்தை எந்த இடத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் ஒரே நேர்கோட்டில் சொல்லியுள்ளார் இயக்குநர் .படத்தின் முதல் காட்சியிலேயே கதைக்குள் வந்து விடுகிறார்  இயக்குநர்.  ஆணவக்கொலை, கிராமத்தில் வாழும் சாதிய கட்டமைப்பு தொழிலுக்கும் சாதிக்கும் உள்ள உறவு போன்ற விஷயங்கள் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சாதி என்ற மரமே தொழில் என்ற விதையில் இருந்து தான் வளர்கிறது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இசக்கி.  நீண்ட இடைவெளிக்கு பின் சேரன் திரையில் தோன்றி இருக்கிறார்.போராட்ட குணமும் அமைதியும் கலந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளார். லால் சாதி உணர்வுள்ள ஒரு மனிதரை கண் முன் வாழ்ந்து காட்டியுள்ளார். எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி ஒரு இடது சாரி சிந்தனை கொண்ட மனிதரை நினைவு படுத்துகிறார்.  படத்தில் ஒரு காட்சியில்  வேல. ராமமூர்த்தி வீட்டில் உள்ள நேதாஜி புகைப்படம் ஒரு குறியீடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. நவீன நாடக நடிகர் பேராசிரியர் மு. ராமசாமி அவர்கள் ஒரு பிணமாக நடித்துள்ளார். 

சாம் C. S. இசையில் பாடல்கள் இனிமை சேர்க்கிறது.                சாதிய பிரச்சனைகளில் அடிக்கடி சொல்லப்படும் பெயர் திருநெல்வேலி மாவட்டம். இந்த மாவட்டத்தையே கதை களமாக  வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.இந்த படம் சொல்லும்   தீர்வை விட முன் வைக்கும் கேள்விகள் அதிகம். தமிழ்க்குடிமகன் -சம கால தமிழகத்தின் பிரதிபலிப்பு.   

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com