ஆளை விடுங்கப்பா சாமி. - DSP !

திரை விமர்சனம்!
ஆளை விடுங்கப்பா சாமி. - DSP !

வித்தியாசமான படங்களை தரும் விஜய் சேதுபதி , கலகலப்பான படங்களை தரும் பொன் ராம். இந்த இருவர் கூட்டணியில் வந்துள்ள படம் DSP என்றவுடன் வித்தியாசமும் கலகலப்பும் சேர்ந்து இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் நிச்சயம் ஏமாந்துதான் போவீர்கள். இதற்கு முன்னால் வந்த போலீஸ் -ரவுடி கதைகளை எடுத்துக்கொண்டு வித்தியாசமாக சொல்கிறோம் என்ற பெயரில் சுவாரசியம் இல்லாமல் சொல்லியிருக் கிறார் பொன்ராம்.

போலீஸ் அதிகாரியாக இருக்கும் வாஸ்கோடகாமா (விஜய் சேதுபதி ) சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான திண்டுக்கலுக்கு வருகிறார். பேருந்தில் தன்னுடன் வரும் சக பயணியிடம் தான் போலீஸ் ஆன கதையை சொல்கிறார். திண்டுக்கல் நகரத்தில் ஒரு மிடில் கிளாஸ் குடு ம்பத்தில் வாழ்ந்து வருபவர் வாஸ்கோடகாமா. இவரின் மாமாவை பிரபல தாதா முட்டை ரவி தனது ஆட்களை வைத்து கொலை செய்து விடுகிறார். காவல் துறை நடவடிக்கை எடுக்க முடியாமல் தவிக்கிறது.ரவி வாஸ்கோவின் தங்கை திருமணத்திற்கு வரும் நண்பர்களை அடிக்கிறார் . ரவியை அடிக்கிறார் வாஸ்கோ.

அப்புறம் என்ன நமக்கு தெரிந்த கதைதான். முட்டை ரவியிடம் இருந்து தப்பிக்க ஊரை விட்டு ஓடும் வாஸ்கோ, ரவியை போலீஸ் ஆகி பழிவாங்க வருகிறார். இந்த கதையை பயணியிடம் சொல்லிய பின் வாஸ்கோ அந்த சக பயணியே வாஸ்கோவை கத்தியால் குத்தி விடுகிறார்.(இந்த கதையை கேட்ட கோபமான்னு தெரியலை )மீண்டும் பிழைத்து திண்டுக்கல் செல்கிறார் வாஸ்கோ.

அங்கே ரவி எம் எல் ஏ ஆகி உள்ளார்.பின்பு நடப்பது எல்லாம் பல படங்களில் பார்த்தது தான். சண்டக்கோழி,றெக்க, கில்லி இப்படி நமக்கு தெரிந்த தெரியாத படங்களின் எல்லா சா ய லுமே இந்த படத்தில் உள்ளது. விஜய்சேதுபதி மாஸ் காட்டுகிறேன் என்ற பெயரில் தமாஷ் காட்டுகிறார். இது போன்ற கதையில் விஜய் சேதுபதி எப்படி நடிக்க ஒப்பு கொண்டார் என்று புரியவில்லை?

விருந்து என்றால் பாயாசம் இருக்க வேண்டும் என்பது போல படம் என்றால் ஹீரோயின் இருக்க வேண்டும் என்பதற்க்காக அனுகீர்த்தியை நடிக்க வைத்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. இருக்கிறார் என்றுதான் சொல்ல முடியும். வெங்கடேஷ் மற்றும் தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு ஆறுதல். நல்லா இருமா பாடலில் மட்டும் இமான் தெரிகிறார். படத்தில் விமல் வரும் காட்சிகள் எதற்கு டைரக்டர் வைத்தார் என டைரக்டருக்கே தெரியுமா என தெரியவில்லை. விமல் நகைச்சுவை என்ற பெயரில் வெறுப்பேற்றுகிறார். போலீஸ்காரர்களை வைத்து காமெடி என்ற பெயரில் உருவ கேலி செய்துள்ளார்கள். மொத்ததில் இந்த படம் - ஆளை விடுங்கப்பா சாமி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com