இன்ஃபினிட்டி விமர்சனம்: ஒரு சராசரி திரில்லர்!

இன்ஃபினிட்டி விமர்சனம்: ஒரு சராசரி திரில்லர்!

நட்டி (நடராஜன் ) வித்யா பிரதீப் நடிப்பில், சாய் கார்த்திக் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் இன்ஃபினிட்டி. இன்ஃபினிட்டி  என்றால் வரையறுக்க முடியாத என்று பொருள். ஒரு பெண் உடப்பட வெவ்வேறு துறை சாரந்த நபர்கள் மர்மமாக கொல்லப்படுகிறார்கள். இந்த கொலையின் பின்னணியை மத்திய புலனாய்வு நிறுவனம் (சி. பி. ஐ )விசாரிக்கும் போது   நடக்கும் திருப்பங்களும் மர்மமான கேள்விகளுக்கு கிடைக்கும் விடைகளும்  இந்த படத்தை நகரத்தி செல்கின்றன.

ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் ஈர்தாலும் படம் நகரும் போது அதிக சுவாரசியம் இல்லாமல் நகர்கிறது. இரண்டாவது பாதி கொஞ்சம் வேகம் எடுத்தாலும் கிளைமாக்ஸ் மிக சாதாரணமாக இருக்கிறது. இது போன்ற திரில்லர் படங்களில் detailing (விளக்கி சொல்லுதல் ) என்ற இலக்கணம் மிக முக்கியம். இந்த detailing என்ற விஷயத்தை டைரக்டர் சரியாக  பயன் படுத்த வில்லை. படத்தின் பல காட்சிகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதது போல தெரிகிறது.திரில்லர் படங்களில்  பட தொகுப்பு  மிக சரியாக அமைய வேண்டும்.

இப்படத்தில் பட தொகுப்பு மிக மிக சாதாரணமாக உள்ளது.பாலசுப்பிரமணியன் G. யின் பின்னணி இசையும், சரவணன் ஸ்ரீ யின் ஒளிப்பதிவும் ஓரளவு கதைக்கு சப்போர்ட் செய்கிறது. படத்தில் ஆறுதலான ஒரே விஷயம் நடிகர்களின் நடிப்புதான். ஒரு நேர்மையான சி பி. ஐ அதிகாரியாக ஒரு இறுக்கமான முகத்தில் வேறுபட்ட நடிப்பை தந்துள்ளார் நட்டி. நாம் எப்போதும் திரையில்  சாந்தமாக  பார்த்த வித்யா பிரதீப் என்னால் இப்படியும் நடிக்க முடியும்  என்பது போல் ஒரு மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார். பெற்றோர்களாக நடிக்கும் ஜீவா ரவி மற்றும் மோனா இவர்களின் நடிப்பில்  ஒரு நடுத்தர குடும்ப பெற்றோர்களை நினைவு படுத்துகிறார்கள் இந்த படத்தில் சமூக மற்றும் மருத்துவம் அடிப்படையில் இரண்டு குற்றங்களை சொல்கிறார்கள்.

இந்த இரண்டில் ஒரு குற்றமே படத்தை சுவாரசியமாக்குவதற்கு போதுமானது. ஆனால் சரியாக கட்டமைக்கபடாத திரைக்கதையால் இன்ஃபினிட்டி திரைப்படம் மிக சாதாரண திரில்லர் படமாக வந்துள்ளது.படம் முடியும் போது  இந்த படத்தின் பாகம் இரண்டு அடுத்த ஆண்டு  வரப்போவதாக காட்டுகிறார்கள். இரண்டாவது பாகமா வது வலுவான திரைக்கதை பின்னணியில் அமையும் என நம்பிக்கை கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com