உதயநிதி ஸ்டாலின் - நிதி அகர்வால்
உதயநிதி ஸ்டாலின் - நிதி அகர்வால்

கார்ப்பரேடின் தவறுகளை சுட்டிக்காட்டும் 'கலகத்தலைவன்'!

உதயநிதி ஸ்டாலின் நடித்து தயாரித்துள்ள படம் கலகத்தலைவன். வஜ்ரா என்ற மோட்டார் வாகனங்கள் தயாரிக்கும் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவன வாகனங்களில் அரசு குறிப்பிட்ட அளவை விட அதிக அளவில் மாசு வெளியேறுவதாக அரசு வஜ்ரா வாகனகளை தடை செய்கிறது.

ரகசியமான இந்த விஷயத்தை வெளியில் கொண்டு சென்ற நபரை கண்டுபிடித்து அழிக்க நினைக்கிறது கார்ப்பரேட் நிறுவனம். இதற்கு எக்ஸ் கமாண்டோவை (ஆரவ் ) நியமிக்கிறது இந்த நபரும் தன் ஆட்களுடன் பலரை பிடித்து துன்புறுத்தி இறுதியில் திரு (உதயநிதி) என்ற நபர்தான் என்பதை கண்டுபிடிக்கிறார்.

கலகத்தலைவன்
கலகத்தலைவன்

திரு இதை எப்படி எதிர் கொண்டார் என்பதுதான் கதை. மணிரத்னம், கெளதம் மேனன் வரிசையில் மகிழ் திருமேனி முக்கியமான டைரக்டராக மாறி வருகிறார்.

வேகமாக நகரும் திரைக்கத்தை, அழகான ஒரு காதல், ஆக்ஷன், வித்தியாசமான தமிழ் தலைப்புகள் என தனக்கென ஒரு ஸ்டைலை ஊருவாக்கி உள்ளார் மகிழ்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இப்படத்தில் வில்லன் வழியாக கதையை நகர்த்தி செல்கிறார். வில்லன் வழியாக சென்றாலும் தான் சொல்ல வந்த கருத்தையும், ஹீரோவிற்கு எதுவும் நிகழ்ந்து விட கூடாது என்ற உணர்வை பார்வையாளருக்கும் ஏற்படுத்தி இருக்கிறார் டைரக்டர்.

தில்ராஜ் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் மகிழின் கனவை மெய்ப்பட வைத்திருக்கின்றன. ஆரவ் ஹாண்ட்சம் லுக்கில் எந்த வித சலனமும் இல்லாமல் ஒரு டெரர் நடிப்பை தந்திருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் - நிதி அகர்வால்
உதயநிதி ஸ்டாலின் - நிதி அகர்வால்

உதயநிதி மாஸாக இல்லாமல் கதையின் நாயகனாக அமைதியாக சிறப்பாக நடித்துள்ளார். நிதி தனக்கு நன்றாக நடிக்க தெரியும் என்பதை இந்த படத்தில் உறுதிப் படுத்தியுள்ளார். கார்ப்பரேட் வெற்றி பெற எதுவும் செய்யும், யாரையும் பலி தரும் என்று கலகத் தலைவன் சொல்கிறான்.

கலகத் தலைவன்-ஜொலிக்கிறான்

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com