மிஸ் ஷெட்டி  மிஸ்டர் பொலிஷெட்டி விமர்சனம்!

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி விமர்சனம்!

மது நாட்டில் விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு அங்கமாக செயற்கை கருத்தரித்தல் மைய்யங்கள் அதிகரித்து வருகின்றன.இந்த மைய்யங்களின் வருகையால் உளவியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களை சொல்லும் படமாக வந்திருக்கிறது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி.     

லண்டனில் புகழ் பெற்ற சமையல் கலைஞராக இருக்கிறார் அன்விதா ஷெட்டி. (அனுஷ்கா ) தாயின் வாழக்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் காதல், திருமணம் போன்ற விஷயங்களை வெறுக்கிறார். தாயின் மறைவிற்கு பிறகு இந்தியா வருகிறார். தனது தனிமையை போக்க குழந்தையை பெற்றுக்கொள்ள நினைக்கிறார். திருமணம் செய்யாமல் ஒரு ஆணின் உயிரணு மூலம்  செயற்கை கருவுறுதல் மருத்துவ தொழில்நுட்பம் வழியாக  குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கிறார்.

இதற்கு தகுதியான சிறந்த மரபு தொடர் கொண்ட இளைஞரை தேடி அலைகிறார். இறுதியில் தன்னை விட வயது குறைந்த சித்து பொலி  ஷெட்டி(நவீன் ) என்ற இளைஞனை சந்திக்கிறார். சித்து அன்விதா தன்னிடம் பழகுவதை காதல் என்று புரிந்து கொள்கிறான்.ஒரு கட்டதில் அன்விதா தன்னிடம் பழகுவது உயிரணு கொடைக்காகத்தான் என்பதை தெரிந்து கொள்கிறான். அதன் பிறகு வரும் பிரச்சனைகள் படத்தை நகர்த்தி செல்கிறது. 

இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்தற்க்கு இயக்குநர் P. மகேஷ் பாபுவை பாராட்டலாம். இதற்கு அடுத்த படியாக பாராட்டபடவேண்டியவர் அனுஷ்காதான். ஹீரோ யாராக இருந்தாலும் பரவாயில்லை. தான் பெரிய ஸ்டாராக இருந்தாலும் தனக்கு கதைதான் முக்கியம் என்று உறுதியாக தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார் அனுஷ்கா. தனிமையின் வலியை அமைதியாக புரிய வைக்கிறார். அனுஷ்காவின் நடிப்பில் வெளிவந்துள்ள படங்களில் இந்த படத்திற்க்கு முக்கிய பங்கு உள்ளது.

ஹீரோ நவீன் ஒரு ஸ்டாண்ட் அப் கலைஞனாகவும், சமகால இளைஞனின் பிரதிபலிப்பாகவும் இருக்கிறார். முரளி சர்மாவும், துளசியும் நம் வீட்டில் பார்க்கும் அப்பா - அம்மாவை நினைவில் கொண்டு வந்து விடுகிறார்கள்.          ஒரு நூலிழை மீறினாலும் தவறாக மாறிவிடும் கதையில், மிக கவன மாக, சிறு விரசமும் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும் விதமாக தந்துள்ளார் மகேஷ்.நீரவ்ஷா  ஒளிப்பதிவில் லைட்டிங் மேஜிக் செய்கிறது. படத்தில் கொஞ்சம் பெண்ணியமும் இருக்கிறது.

ஆண் என்பவன் யார்? பெண்ணை அதிகாரம் செய்வதற்கா? இல்லை 'எந்த பிரச்சனையிலும் நான் இருக்கிறேன் என்று பெண்ணின் கை பிடித்து அழைத்து செல்வதற்கு, சாய்ந்து கொள்ள ஒரு தோழமை என சொல்கிறது இப்படம். மாடர்ன் நுட்பத்தை நமது கலாச்சாரம் மீறாமல் சொன்ன மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி படத்தை தந்த மனவாடுகளை பாராட்டலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com