மோகன்லால் நடித்துள்ள ‘அலோன்’ திரைப்படம் வரும் மார்ச் 3-ம் தேதி Disney Hot star ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
மலையாளத்தில் ‘கடுவா’, ‘காப்பா’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஷாஜி கைலாஷ் மோகன்லாலை வைத்து இயக்கிய படம் ‘அலோன்’. மோகன்லால் ‘மான்ஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் நடித்திருந்தார்.
மோகன்லால் மற்றும் மலையாள ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்திருந்தார். ரூ.67 லட்சத்தில் உருவான ‘அலோன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.2.5 கோடியைக்கடந்து வசூலித்தது. இந்நிலையில் படம் வரும் மார்ச் 3-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கோவிட் காலத்தில் கதை நடைபெறுவதாக கட்டப் படுகிறது. இதில் ஹீரோவாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்துள்ளார். அவரது காதலியாக வாய்ஸ் ஓவராக யமுனா கேரக்டரை வடிவமைத்திருப்பது புதிய முயற்சி. கொரோனா காலகட்டத்தில் தனியாக ஒரு அபார்ட்மெண்டில் வசிக்கும் சூழல் மோகன்லாலுக்கு ஏற்படுகிறது. அப்போது அவருக்கு சில அனுமானுஷ்ய குரல்கள் இரவும் பகலும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த அம்மா மகளுடைய குரல்கள் அவர்களுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதாக மோகன்லாலுக்கு தோன்றுகிறது. அதனை தொடர்ந்து அந்த அபார்ட்மெண்டிலிருந்தே விசாரணைகளை தொடங்கி போனிலேயே பல்வேறு தகவல்களை கண்டுபிடிக்கிறார்.
கொலையாளி யார்? கொலைகள் ஏன் நடந்தது? என்பதுடன் திடுக்கிடும் தகவல்களோடு மாபெரும் ட்விஸ்டுடன் கதை முடிவடைகிறது. ஒன் மேன் ஷோவாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் திரைக்கதையினை சிறப்பாகவே நகர்த்துகிறார். படத்தின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது.
மோகன்லால் மற்றும் அந்த அபார்ட்மெண்ட் தொடர்ந்து கட்டப்படுவது காட்சியமைப்பில் சற்று தொய்வினை ஏற்படுத்துகிறது. இன்னும் கதையிலும் காட்சியமைப்பிலும் சற்று சுவாரஸ்யங்கள் சேர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
மொத்தத்தில் இத்திரைப்படம் சுவாரஸ்யமான சலிப்பு!
அலோன் தனித்து தெரியவில்லை!