ஷாருக்கானின் 'பதான்' திரைப்பட விமர்சனம்!

ஷாருக்கானின் 'பதான்' திரைப்பட விமர்சனம்!

நான்காண்டுகளுக்கு பின் ஷாருக்கான் நடித்து பெரிய எதிர்பார்ப்பில்  வந்துள்ள படம் பதான். எதிர்பார்பை பூர்த்தி செய்துள்ளதா என்பதுதான் பலரின் கேள்வி. பாகிஸ்தான், தீவிரவாதி, உளவாளி, எஜெண்ட், என அரைத்த மாவை பிரம்மாண்டமாக அரைத்துள்ளார்கள். சித்தார்த் ஆனந்த் இப்படத்தை இயக்கி உள்ளார். காஷ்மீ ரில் இந்திய அரசு மேற்கொள்ளும் பலவித சட்ட மாற்றங்களால் கோபமாகும் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை அழிக்க ஒருவரை (ஜான் ஆப்ரகம்) நியமிக்கிறது. இவர் அழிந்து போன அம்மை கிருமிகளை மறு உருவாக்கம் செய்து மக்களை அழிக்க நினைக்கிறார். இவருடன் மோதுகிறார் தேச பக்தி நிறைந்த நம் ஹீரோ பதான். அதன் பிறகு வேறென்ன? அதே சண்டை காட்சிகள், துப்பாக்கி சத்தம் இறுதியில் நாட்டு பற்று. காட்சிக்கு காட்சிக்கு பிரமாதமான விஸுவல் இருந்தாலும் திரைக்கதையில் உறுதி இல்லாததால் ஒரு சாதாரண படமாக கடந்து செல்கிறது. ஷட்சித் பலூஸ் ஒளிப்பதிவும் கர்சரண் ஆர்யா மற்றும் கைலாஷ் ஷாவின் ஆர்ட் டைரக்ட்ஷனும்  இணைந்து சிறப்பான காட்சி கலவையை தருகின்றன. ஷாருக்கானின் வசீகரம் கொஞ்சம் குறைந்துதான் காணப்படுகிறது. ஆனாலும் நடிப்பில் பழைய ஷாருக்தான் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் காண்பிக்கிறார்.    ஜான் ஆபிரகம் நடிப்பிலும், உடலிலும் உறுதியாக இருக்கிறார். உடை வடிவமைப்பாளர் என்பவர் தீபிகா படுகோனேக்கு இருக்கிறாரா என்றே தெரியவில்லை. மிக குறைந்த ஆடையிலேயே பல காட்சிகளில் வருகிறார் தீபிகா.                              ஷாருக் படத்தில் ஒரு அழகியல் இருக்கும் இந்த படத்தில் இது மிஸ்ஸிங். ஷாருக் பாய்  உங்களிடம் இருந்து மாறுபட்ட படங்களை நம் இந்திய ரசிகர்கள் எதிர் பார்க்கிறார்கள் அடுத்த படங்களில் இதை பூர்த்தி செய்யுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com