ராங்கி - அசட்டுத்தனமானவள்!

திரை விமர்சனம்!
ராங்கி - அசட்டுத்தனமானவள்!

திரிஷா முதன்மை கதாநாயகி வேடத்தில் நடிக்க 'எங்கேயும் எப்போதும்' சரவணன் படத்தை இயக்கியுள்ளார். திரைபடத்தின் கதையை ஏ.ஆர் முருகதாஸ் எழுதியுள்ளார். பொன்னியின் செல்வன் திரைபடத்திற்கு பிறகு த்ரிஷாவின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நேரத்தில் த்ரிஷா இப்படத்தில் நடித்துள்ளார்.

ஆன்லைன் சேனல் ஒன்றில் ரிப்போர்ட்டராக பணிபுரிகிறார் த்ரிஷா. அவர் வீட்டிற்கு கீழேயே அவரது அண்ணன் குடும்பம் வசிக்கிறது. அண்ணன் மகளுக்கு எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சினை ஏற்பட விஷயம் த்ரிஷாவிடம் வருகிறது. த்ரிஷாவின் அண்ணன் மகளாக அனஸ்வரா நடித்துள்ளார். இளம் வயதுக்கே உரிய துள்ளலும், குறும்புத்தனமும் அனஸ்வராவிடம் இயல்பாகவே இருக்கின்றது. படத்தில் சுஷ்மிதாவாக வரும் அனஸ்வராவின் புகைப்படத்தை வைத்து அவளது வகுப்பு தோழி போலியான ஆன்லைன் கணக்கை துவங்க அதில் சற்று ப்ரச்சனையாகிறது. அது த்ரிஷாவால் கண்டுபிடிக்கப்பட்டு அதன் பாஸ்வேர்ட் த்ரிஷாவிற்கு கொடுக்கப்படுகிறது.

அதில் ப்ரச்சனை செய்பவர்களை அழைத்து த்ரிஷா புதுவிதமாக மிரட்டி வைக்கிறார். அதில் எதோச்சையாக ஒரு இளைஞன் சாட்டிங்கிற்கு வர அதில் த்ரிஷா ஆர்வமாகிறார். அவனை திவிரவாதி என கண்டுபிடித்து பரபரப்பான நியூசை பெற தொடர்ந்து அவனிடம் சாட் செய்கிறார்.

அப்போது முகப்பு புகைபடத்தில் இருக்கும் சுஷ்மிதாவை அந்த இளைஞன் மனதுக்குள் காதலிப்பதை கண்டுபிடிக்கிறாள். அதை வைத்து சாட்டிங்கில் அவனை பற்றிய தகவல்களை வாங்குகிறார் த்ரிஷா . கூடவே உளவுத்துறையும் மோப்பம் பிடித்து த்ரிஷாவை நெருங்குகிறது. த்ரிஷா மற்றும் அனஸ்வராவை வைத்து தீவிரவாதியை பிடிக்கிறதா? உளவுத்துறை என்பது தான் க்ளைமாக்ஸ்.

ராங்கி என பெயர் வைத்ததால் படத்தில் த்ரிஷாவின் உடல்மொழி மற்றும் பேச்சு சற்று தெனவட்டாக ராங்கிதனமாகவே சித்தரிக்கப்படுகிறது. அதில் அசட்டுத்தனமே அதிகமாக தெரிகிறது. தைரியசாலி என்பது வேறு அசட்டு துணிச்சல் என்பது வேறு.

படத்தில் ஏகப்பட்ட இடங்களில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ் எல்லை மீறுகிறது.

த்ரிஷாவுக்கும் போலிஸ்காரருக்குமான டயலாக்குகள் மிகைப்படுத்தப்பட்டது. எந்த போலீஸ்காரரும் பத்திரிகை ஆட்களிடம் தேவையில்லாமல் சண்டையிட விரும்பமாட்டார்கள் என்பதே யதார்த்தம்.

ஏதோ ஒரு நாட்டிலுள்ள ஒரு இளம் தீவிரவாதி த்ரிஷா சொன்ன காரணத்திற்காக கிண்டியில் உள்ள போலீஸ்காரரை அங்கிருந்தே ஆட்களை ஏவி கொல்வதெல்லாம் நம்பமுடியாத அபத்தம்

போலி கணக்குகளை டெலிட் செய்யாமல் சிறு பெண்ணில் பெயரில் சாட்டிங்கை தொடர்வது மிகைப்படுத்தல்.

ஆபாச சாட்டுகள் செய்பவர்களை ஹோட்டலுக்கு அழைத்து சிறு பெண்ணையும் வைத்துக்கொண்டு மீட்டிங் போட்டு அவர்களை மிரட்டி வைப்பதெல்லாம் அபத்தத்தின் உச்சக்கட்டம்.

தீவிரவாதி என்று தெரிந்தும் அண்ணன் மகளின் புகைப்படம் அனுப்புவது அபத்தமோ அபத்தம்.

காதல் என தெரிந்தும், தீவிரவாதி என தெரிந்தும் த்ரிஷா சாட்களை தொடர்வது மற்றும் வீட்டு அட்ரஸ் முதற்கொண்டு அனைத்து தகவல்களையும் தருவது அபத்தமான அசட்டுத்தனம்.

த்ரிஷா வெறும் ரிப்போர்ட்டர் தான். ஆனால் தீவிரவாதிகளிடம் ஆக்ஷன் வீராங்கனை போல பத்து பேரை ஒரே நேரத்தில் பறந்து பறந்து அடிக்கிறார். பல இடங்களில் அசால்ட்டாக துப்பாக்கி பயன்படுத்துகிறார் என்பதெல்லாம் கடைந்தெடுத்த லாஜிக் மிஸ்டேக்குகள்.

ஏதோ ஒரு நாட்டின் தீவிரவாதியை பிடிக்க பதினைந்து வயது சிறு பெண்ணையும் , த்ரிஷாவையும் வெளிநாட்டுக்கு உளவுத்துறை அழைத்து செல்வதெல்லாம் ஆகப்பெரிய பயங்கரவாத எல்லை தாண்டிய நடவடிக்கை.

த்ரிஷா தீவிரவாதியின் இறப்பிற்க்காக அழுவதெல்லாம் ஆகப்பெரும் தீவிரவாதம் எனலாம்.

எப்படியோ லாஜிக் மிஸ்டேக்கும் அசட்டுதனமுமாக படம் நகர்ந்து செல்கிறது.

ராங்கி அசட்டுத்தனமானவள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com