ரெண்டகம் திரைப்படம் விமர்சனம்

ரெண்டகம்-சஸ்பென்ஸ் -பரபரப்பு-திரில்லர்
Rendagam movie
Rendagam movie

-ராகவ் குமார்.

ரபரப்பு, சஸ்பென்ஸ் என்ற வகையில் கேரள தேசத்தில் இருந்து  வந்துள்ள படம் ரெண்டகம். ஷாஷி நடேசன், ஆர்யா தயாரித்துள்ளார்கள்  அரவிந்த்சாமி, குஞ்சக்கோ போபன் நடிப்பில் பெளினி இயக்கியுள்ளார் . சஞ்சீவ் கதை மற்றும் திரைக்கதை அமைத்துள்ளார்.       

ஒரு மாஃபியா கும்பல் குஞ்சக்கோ போபனை அழைத்து ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறது. அசைனார் என்ற தாதா மங்களூர் அருகில் நடந்த மோதலில் சுட்டு கொள்ளப்பட்டு விட்டார்.உடன் இருந்த டேவிட்(அரவிந்த் சாமி ) தலையில் அடிபட்டு, பழைய நினைவுகளை மறந்து, இப்போது மீண்டு வந்துருக்கிறான்.

இவனின் நினைவுகளை மீட்டு இவனிடம் இருக்கும் தங்க புதையலை எங்களிடம் தர  வேண்டும், இதற்கு நீ டேவிட்டிடம் நண்பனாக பழக வேண்டும் என்று சொல்கிறது. பணத்திற்காக போபனும் ஒத்துகொள்கிறார். 

Rendagam movie poster
Rendagam movie poster

போபன் அரவிந்த் சாமியிடம் நண்பனாக பழகி,  நினைவை இழந்த மங்களூர்க்கு அழைத்து செல்கிறார்.பயணத்தில் ஒரு கட்டத்தில், அசைனார் இறக்கவில்லை நான் தான் அசைனார். நான் அசைனார் என்றால் நீதான் டேவிட் என்கிறார் அரவிந்த்.

உன் நினைவுகளை மீட்க நான் போட்ட நாடகம் இது எனவும் சொல்கிறார். எதற்காக இந்த நாடகம், யார் இவர்கள் எங்கே தங்க புதையல் என்பதை நோக்கி படம் செல்கிறது. ஆனால் இந்த கேள்விகளுடன் படம் முடிவடைகிறது.

இதன் பதில்களை ரெண்டகம் படத்தின் அடுத்த பகுதியில்தான் தெரிந்து கொள்ள முடியும். திரையில் இருந்து கொஞ்சம் கண்ணை எடுத்தாலும் கதையின்  போக்கை புரிந்து கொள்வது கடினமாகி விடும். ஆனால் நாம் கண்ணை எடுக்க மாட்டோம்.

அந்த அளவுக்கு திரைக்கதையை பரபரப்பாக கொண்டு செல்கிறார் கதை மற்றும் திரைக்கதை எழுதிய சஞ்சீவ். மும்பையிலுருந்து மங்களூர் செல்லும் கார் பயணத்தில் நம்மையும் சேர்த்து அழைத்து செல்வது போல இருக்கிறது கெளதம் ஷங்கரின் ஒளிப்பதிவு.

மேற்கு கடற்கரையின் அழகை அழகாக படம் பிடித்துள்ளார் இயக்குனர். சஸ்பென்ஸ்க்கு அப்பு.N. பட்டத்திரின் பட தொகுப்பு கூடுதல் பலம் சேர்க்கிறது. அதிகமாக பேசி ஆர்பாட்டமாக நடிக்கிறார் குஞ்சக்கோ போபன்.

ஹேர் ஸ்டைலும், உடல் மொழியும் அற்புதம். குறைவாக பேசி, சைலன்ட் தாதாவாக நடிக்கிறார் அரவிந்த் சாமி. அழகான அரவிந்த் சாமி இப்படத்தில் பார்த்தால் நமக்கு பயம் வருகிறது.ஆடுகளம் நரேன், ஈஷா ரெபா என சிலரும் வந்து பங்களிப்பை தந்து  போகிறார்கள்.

ஒரு சிறந்த பொழுதுபோக்கு படத்தில் கூட தேவையற்ற காட்சிகள் வைக்காமல் நல்ல படத்தை தர முடியும் என சேர நாட்டினர் நிரூபித்து உள்ளனர் .

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com