டக்கர் விமர்சனம்  - கொஞ்சம் மக்கர்தான்!

டக்கர் விமர்சனம் - கொஞ்சம் மக்கர்தான்!

பேஷன் ஸ்டூடியோ தயாரிப்பில் கார்த்தி ஜி.கிரிஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் டக்கர். இப்படத்தில் சித்தார்த், திவ்யான்ஷா கௌஷிக் நடித்துளார்க்கள். ஒரு பணக்கார ரவுடியிடம் கார் டிரைவராக வேலை செய்கிறார் சித்தார்த். காரை விபத்துக்குள்ளாக்கி  விட ஏழு வருடம் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க சொல்கிறார் முதலாளி. இதன் நடுவில் ஒரு கும்பல் ஒரு பணக்கார பெண்ணை கடத்துகிறது. இந்த பெண் கடத்தல் கும்பலில் இருந்து தப்பி  எதிர்பாராத விதமாக சித்தார்த்தை சந்திக்கிறார். சில பல குழப்பங்களுக்கு பிறகு காதல் மலர்கிறது. கடத்தல் கும்பலில் இருந்து பெண்ணை மீட்பதுதான் மீதிக்கதை.

அம்மா, அன்பு கிடைக்காத பணக்கார பெண், விளிம்பு நிலையில் உள்ள இளைஞன் மீது காதல் காமெடி குண்டர்களுடன் கடத்தல் கும்பல், என நாம் பல படங்களில் பார்த்த பார்முலாவில் வந்துள்ளது டக்கர் படம். பட நகர்விலும் எந்த விருவிறுப்பும் இல்லை. வில்லன் கதாபாத்திரத் தை வைத்துதான் கதாநாயக பிம்பத்தை நன்றாக உருவாக்க முடியும். இப்படத்தில் வில்லன் அபி மன்யு சிங் கேரக்டர் வில்லனா அல்லது காமெடி வில்லனா என்ற குழப்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.              வாஞ்சிநாதனின் ஒளிப்பதிவு சற்று ஆறுதல் தருகிறது.

சித்தார்த்தின் நடிப்பு இன்னமும் நன்றாக இருந்திருக்கலாம். திவ்யன்ஷாவின் நடிப்பும், கதாபாத்திரமும் சரியாக பொருந்தி போகிறது. யோகி பாபுவின் நகைச்சுவை சிரிப்பை வர வைக்காமல் கடந்து செல்கிறது. புகைப்பதும், மது குடிப்பதும் நவ நாகரீக பெண்ணின் அடையாளம் என எத்தனை காலம் காட்ட போகிறார்களோ? டக்கர் டக்கராக இல்லா விட்டாலும் பரவாயில்லை கொஞ்சம் மக்கராகவே இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com