‘LOVE’ படம் விமர்சனம்: லவ் புரியதா புதிர்!

‘LOVE’ படம் விமர்சனம்: லவ் புரியதா புதிர்!

மிழ் சினிமாவில் பேசப்படும் காதல் பெரும்பாலும் திருமணத்திற்கு முந்தையை காதலாகத்தான் இருக்கும். திருமணத்திற்க்கு பின் தம்பதிகளுக்குள் இருக்கவேண்டிய காதல் பற்றி சினிமா அதிகம் காட்டியது இல்லை. திருமணத்திற்கு பின்பு தம்பதிகளுக்குள் காதல் இல்லாமல் போனால் ஏற்படும் விளைவுகள் பற்றி சொல்கிறது R.P. பாலா இயக்கிய லவ் திரைப்படம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு காலித் ரகுமான் இயக்கத்தில் டாம் சாக்கோ நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் லவ். இந்த லவ் படத்தை தழுவி R. P. பாலா லவ் படத்தை தற்போது தமிழில் இயக்கியுள்ளார். பரத், வாணி போஜன் ராதாரவி, விவேக் பிரசன்னா இப்படத்தில் நடித்துளார்கள்.

காதலித்து திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள் இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும்போது பொருளாதார நெருக்கடிகள் உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இருவருக்கும் இடையே சண்டை முற்றுகிறது. இந்த சண்டையில் கணவன் மனைவியை கொலை செய்து விடுகிறான். கொலையை மறைக்க முயல்கிறான். நண்பர்கள் கொலையை கண்டுபிடித்து விடுகிறார்கள். கொலையை மறைக்க முடிந்ததா? மறைக்க செய்யும் முயற்சிகள் என்ன என்பதாக கதை நகர்கிறது. நாம் எதிர்பார்க்காத திருப்பங்கள் படத்தில் உள்ளது. இது சைக்கோ திரில்லர் வகை படத்தை சேர்ந்தது. எடுத்துக்கொண்ட கதைக்கு ஏற்றாற் போல் பரபரப்புடன் திரைக்கதை நகர்கிறது.

தேவையற்ற கதாபாத்திரங்களோ, காட்சிகளோ இல்லாமல் இருப்பது கூடுதல் சிறப்பு. பணி சுமையால் வரும் மன அழுத்தம், திருமண பந்தத்தை தாண்டிய உறவு களால் ஏற்படும் சிக்கல்கள் என பல்வேறு விஷயங்களை இந்த லவ் சொல்கிறது. குறிப்பாக உயர் நடுத்தர குடும்பங்களில் நடக்கும் குடும்ப வன்முறை (domestic violence )பற்றி படம் அழுத்தமாக பதிவு செய்கிறது. படம் ஒரு குறிப்பிட்டஇடத்தில் நடப்பது போல காட்டினாலும் முத்தையாவின் ஒளிப்பதிவில் பார்க்கும் போது சலி ப்படையாமல் இருக்கிறோம்.

பரத், வாணி போஜன் ஒரு நிஜ கணவன் மனைவி போல் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். நடிப்பில் இருவரும் சிறப்பாக நடித்து காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறார்கள். படத்தில் பேசப்படும் உளவியல் விஷயத்தை விளக்கி சொல்லியிருந்தால் படம் கூடுதல் கவனம் பெற்றிருக்கும். லவ் எப்போதும் இருக்க வேண்டிய ஒன்று என்பதை அழுத்தி சொல்கிறது இந்த லவ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com