தனியார் வங்கிகளின் இன்னொரு முகம் 'துணிவு'!

திரை விமர்சனம்
துணிவு
துணிவு

நிதி நிறுவனங்கள் செய்யும் மியூசு யுவல் பண்ட், கிரெடிட் கார்ட் உட்பட பல்வேறு மோசடிகளை வைத்து ஒரு பரபரப்பான ஆக்ஷன் கிரைம் திரில்லர் படமாக துணிவு படத்தை தந்துள்ளார் டைரக்டர் H.வினோத். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் படமாக வந்துள்ளது துணிவு. காவல் துறையில் உள்ள ஒரு உயர் அதிகாரி உதவியுடன் நகரத்தில் உள்ள பிரபல வங்கி ஒன்றில் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் வங்கிக்குள் நுழைகிறது ஒரு கும்பல். அங்கே உள்ள ஒருவர் (அஜித்) கொள்ளை அடிக்கும் திட்டத்தை முறியடிக்கிறார்.

அஜித் காப்பாற்ற வந்தவர் என நினைக்கும் போது அஜித் கொள்ளையடிக்க வந்தவர் என்று தெரிகிறது. இதை தாண்டி மூன்றாவதாக ஒரு டீம் கொள்ளையடிக்க திட்டம் போட்டு வங்கிக்குள் இருப்பதும் தெரிய வருகிறது. இந்த டீமை அனுப்பியதே வங்கியின் சேர்மன் தான் என்று அஜித் கண்டு பிடிக்கிறார். இதெல்லாம் ஏன் நடக்கிறது, உண்மையில் அஜித் யார் என்பதை வினோத் மேற்கத்திய படங்களின் தரத்தில் சொல்லியுள்ளார் டைரக்டர்.

அஜித்
அஜித்

படம் தொய்வில்லாமல் காட்சிக்கு காட்சி ட்விஸ்டாக செல்கிறது. லோன், கிரெடிட் கார்டு, ஷேர் மார்க்கெட் உட்பட பல்வேறு தனியார் வங்கி மோசடிகளை சமரசம் இல்லாமல் சொல்கிறது துணிவு. வங்கியின் மார்க்கெட்டிங் டீம் என்பதை மக்களுக்கு ஆசை வார்த்தை சொல்லி மக்களை கவரும் டீம் தான் என்பதை புரிய வைக்கிறார் டைரக்டர்.

அஜித் ஆக்ஷன், எமோஷன், என பிரமாதமாக ஸ்கோர் செய்கிறார். வில்லன் ஜான் கோக்கன் இரக்கமில்லாத கார்பரேட் முதலாளியை கண் முன் நிறுத்துகிறார். மஞ்சு வாரியார் அளவான, கட்சிதமான நடிப்பை தந்துள்ளார்.

அஜித்
அஜித்

மைபா என்ற கேரக்டரில் வருபவர் யதார்த்தமான காமெடிக்கு உத்ராவாதம் தருகிறார். ஜிப்ரான் இசையும், நீரவ் ஷா ஒளிப்பதிவும் படத்தின் தரத்தை உயர்த்துகின்றன. சுப்ரீம் சுந்தரின் சண்டை காட்சிகள் லாஜிக் மீறல்கள் இருந்தாலும், ரசிக்கும் படியாக உள்ளது.

தனியார் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கும், சுற்றுலா சலுகை, ஊக்கத்தொகை போன்றவைகளுக்கு பின்னால் உள்ள வணிக அரசியலை இப்படம் சொல்கிறது. இந்த படத்தை பார்த்த பின்பு மியூசுவல் பண்ட், ஷேர் மார்க்கெட் போன்றவைகளில் முதலீடு செய்யும் போதும், கிரெடிட் கார்டு வாங்கும் போதும் யோசனை செய்வீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com