வதந்தி :வேலோனியின் கட்டுக்கதை!

SJ சூர்யா
SJ சூர்யா

நமது நாட்டில் ஒரு பெண் அதுவும் அழகான பெண்ணாக இருந்து மர்மமான முறையில் இறந்து போனால் நமது நாட்டு மீடியாகளில் சில இந்த மரணத்திற்கு பின் உள்ள உண்மையை கண்டு பிடிக்கிறோம் என்ற பெயரில் இறந்த பெண்ணை பற்றி பல தவறான உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுகின்றன. இதனால் இறந்த பெண்ணின் பெயருக்கும், அவரது குடும்பத்திற்கும் களங்கம் ஏற்படுகிறது.

இந்த தவறை மைய்யமாக வைத்து வதந்தி- வேலோனியின் கட்டுக்கதை என்ற வெப் தொடரை இயக்கி உள்ளார் ஆன்ட்ரு. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ள இந்த தொடரை இயக்குனர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரித்து உள்ளார்கள் .

கன்னியாகுமரி மாவட்டத்தில் பட பிடிப்பு நடக்கும் ஒரு நாளில் அந்த படத்தின் ஹீரோயின் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கண்டெடுக்க படுகிறார். மீடியாவில் இந்த செய்தி வேகமாக பரவுகிறது.திடீரென இறந்த பெண் மீடியாவில் தோன்றி நான் இறக்கவில்லை உயிருடந்தான் இருக்கிறேன் என்கிறார்.

கொலை செய்யப்பட்டது யார் என போலீஸ் விசாரணை செய்கிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகான இளம் பெண் வேலோனி தான் படுகொலை செய்யப்பட்ட பெண் என கண்டு பிடிக்கிறது காவல் துறை. காவல் துறையின் விசாரணையில் திருப்தி அடையாத மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி விரைவாக வழக்கை முடிக்க சொல்கிறார்.

இதனால் விவேக் (sj சூர்யா ) என்ற அதிகாரியை நியமிக்கிறது காவல் துறை.விவேக், இறந்த பெண் திருமணம் செய்து கொள்ள இருந்த இளைஞனை விசாரிக்கிறார். அந்த இளைஞனும் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்கிறான். ஒத்தமலை பகுதியில் தான் இந்த பெண் கொலை செய்யப் பட்டிருக்க வேண்டும் என எண்ணி அந்த பகுதியில் உள்ள சில தடயங்களையும்,மனிதர்களையும் சந்தேகிக்கிறார் விவேக்.

ஒரு கட்டத்தில் ஒரு புள்ளியில் நிற்கிறது கேஸ். செய்தி தாள் ஒன்று மிக மோசமாக கொலை செய்யப்பட்ட பெண்ணை பற்றி செய்திகளை தருகிறது.. மிக சிறந்த சஸ்பென்ஸ் திரில்லராக வந்திருக்கிறது வதந்தி. விளக்கி சொல்லுதல், (detail ) டிரீட்மென்ட், கதாபாத்தி உருவாக்கம், (characterization ) காட்சிப்படுத்துதல் (visuvalaisation ) இந்த நான்கையும் மிக சிறப்பாக காட்சி ப் படுத்தி உள்ளார் டைரக்டர். இந்த கதையோடு பார்வையாளரையும் அழைத்து செல்கிறது திரைக்கதை.

லைலா
லைலா

கன்னியாகுமரி மாவட்டத்தில் கணிசமான அளவில் உள்ள கிறிஸ்தவ மக்களின் பின் புலத்தில் இந்த கதை சொல்லப் பட்டிருக்கிறது. படத்தில் வரும் பெரும்பான்மையான பெயர்கள் கிறித்துவ பெயர்களாக உள்ளது.

அழகு, நடிப்பு, கண்களில் ஒரு குழந்தைத் தனம் என முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பை தந்துள்ளார வேலோனியாக நடிக்கும் சஞ்சனா. தமிழ் சினிமா இவரை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

SJ சூர்யா காக்கி உடைக்குள் ஒரு கனிந்த மனம் உடையவராக நல்ல நடிப்பை தந்துள்ளார்.நாசர் எழுத்தாளராக பொருந்தி போகிறார். லைலாவிற்கு இது ரீ என்ட்ரி என்று சொல்லலாம். தைரியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒரு பெண் சகஜமாக சிரித்து பேசுவதை இன்னமும் பக்குவமாக பார்க்க முடியாத சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை வதந்தி ஆழமாக சொல்கிறது.

பிரச்சனையால் பாதிக்கப்படும் பெண்களின் நற்பெயரை படுகொலை( character assasination ) செய்வது என்பது நம் நாட்டில் சாதாரணமாக நடைபெறும் நிகழ்வு. இது மாற வேண்டும் என்கிறது இந்த தொடர்.

வதந்தி -உண்மையை உரக்க சொல்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com