அற்புதம்! அதிசயம்! ஆஹா - அவதார் : தி வே ஆப் வாட்டர்!

அவதார்
அவதார்

இன்று உலகமே கொண்டாடும் 'அவதார் : தி வே ஆப் வாட்டர்' படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது கதை? ஹாலிவுட் படத்தில் அடித்து துவைத்த மனிதர்கள் (vs ) வேற்றுகிரக வாசிகள் கதைதான். திரைக்கதை - நார்மல் திரைக்கதை தான். வேறென்ன? உழைப்பு -உழைப்பு -உழைப்பு. ஒவ்வொரு பிரேமிலும் ரசிகர்களுக்கு மிக சிறந்த விஸுவலையும், இருக்கை நுனியில் கண்ணை திரையில் வைக்க வேண்டும் என்பதற்காகவும் அவதார் டீம் மிக கடுமையாக உழைத்திருக்கிறது.

இந்த வெற்றியின் பின்னால் இருப்பது தேடலும் உழைப்பும் தான். இதற்காக இந்த அவதார் குழுவின் கேப்டன் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் ஒரு மரியாதை கலந்த வணக்கத்தை சொல்லுவோம். பண்டோரா கிரகத்தில் வாழும் வன வாசிகளுக்கும் நமது பூமியின் மனிதர்களுக்கும் யுத்தமே அவதாரின் முதல் பாகம்.

அவதார்
அவதார்

நீர் உலகத்தில் உள்ள மெட்காயினா வேற்று கிரக வாசிகளுடன் மோதும் கதை தான் இந்த அவதார் - தி வே ஆப் வாட்டர். கடல் உள்ளே தஞ்சம் புகுந்த வனவாசிகளை அழிக்க நினைக்கிறது ஒரு கும்பல். தஞ்சம் புகுந்த ஹீரோ அண்ட் டீம் நீர் வாழ் மக்களுக்குடன் சேர்ந்து எதிரிகளை வீழ்த்துகிறார்.

படம் ஹாலிவுட் படமாக இருந்தாலும் இந்திய குடும்ப உறவை மையமாக வைத்து படம் தந்துள்ளார் டைரக்டர். வேற்று கிரக வாசிகளாக இருந்தாலும் அவர்களுக்குள் கணவன் மனைவி, மகன், மகள் என பாசத்துடன் வாழ்கிறார்கள். சிறு சிறு சண்டைகள் அன்பின் பரிமாற்றம் என அழகாக செல்கிறது கதை. நீருக்கு அடியில் கேமரா செல்லும் போது நாமும் சேர்ந்து பயணிக்கிறோம்.

அவதார்
அவதார்

VFX எனும் தொழில் நுட்பம் மிக பெரிய வெற்றி பெற்றுள்ளதாக தான் இதை கருத்த வேண்டும். ஜேக் சல்லி, நெய்தரி உட்பட அனைவரும் மிக சிறப்பாக நடித்திருகிறார்கள் என்று சொல்வதை விட டைரக்டர் நன்றாக நடிக்க வைத்துள்ளார் என்று சொல்ல வேண்டும் டுல்கூன் எனும் மிக பெரிய திமிங்கலதையும் நடிக்க வைத்துள்ளார் டைரக்டர்.

டுல்கூன் எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் போது நாமும் கைத்தட்டுகிறோம். நமது இந்திய சினிமாக்கள் சிலவற்றில் கார் ஓட்டுவது போல காட்சி வரும். ஸ்டூடியோவில் எடுக்க படும் இந்த காட்சிகள் சினிமா திரையில் பார்க்கும் போது கார் ஓடாததும், ஸ்டூடியோவில் எடுக்கபட்டதும் நன்றாக தெரியும். இது போன்ற காட்சிகளை பார்க்கும் நமது ரசிகர்களுக்கு அவதார் ஒரு விஸுவல் வராப்ரசாதம். அவதார் -கொண்டாடி மகிழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com