யூகி
யூகி

யூகிக்க முடியாத திருப்பங்கள் - 'யூகி' !

மருத்துவமனைகளில் நடக்கும் மெடிக்கல் கிரைம் என்ற ஒன் லைனை மைய்யமாக வைத்து வந்துள்ள படம் யூகி. டாக்டர் பிரபு திலக் இப்படத்தை தயாரித்துள்ளார்.

சிலை கடத்தலில் தொடர்புடையை போலீஸ் கமிஷ்னர் புருஷோத்தமன் (பிரதாப் போத்தன் ) ஒரு பெண்ணை கண்டுபிடித்து தரும்படி டிடெக்டிவிடம் (நரேன் ) கேட்கிறார் இதே பெண்ணை ஒரு அரசியல்வாதி மற்றொரு நபரிடம் (நட்டி) தேட சொல்கிறார்.

இந்த இரு குழுக்களும் ஸ்டெல்லா என்ற பெயருடைய அந்த பெண்ணை தேடுகிறது. ஒரு பெரிய மருத்துவமனையில் இப்பெண்ணுக்கு ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதை இந்த இரண்டு குழுவும் கண்டுபிடிக்கிறது.

யார் இந்த ஸ்டெல்லா? மருத்துவமனை என்ன செய்தது என்ற முடிச்சுக்களை இரண்டாவது பாதியில் அவிழ்கிறார் டைரக்டர். சஸ் பென்ஸ் திரில்லர் வகை படமான யூகி முதலில் இருந்து கடைசி வரை பரபரப்புடனும், பல்வேறு ட்விஸ்ட்களுடன் செல்கிறது.

வாடகைத்தாய் என்ற ஒற்றை புள்ளியில் இந்த திரில்லரை இணைத் திருக்கிறார் டைரக்டர் ஜாக் ஹரிஸ்.தொய்வில்லாத நேர்த்தியான ஸ்கிரிப்ட். இந்த ஸ்கிரிப்ட்டிற்கு எடிட்டிங் நன்றாக சப்போர்ட் செய்கிறது.

நரேன் - கதிர் -  நட்டி
நரேன் - கதிர் - நட்டி

படத்தில் நடிப்பில் நன்றாக ஸ்கோர் செய்வது ஆனந்திதான் கணவருக்காக போராடும் போது நாம் அன்றாடம் வாழ்க்கையில் பார்க்கும் பெண்ணை நினைவு படுத்துகிறார். நட்டி, கதிர், நரேன் மூவருமே மிடுக்காகவும், சிறப்பாகவும் நடித்து உள்ளார்கள்.

குழந்தை இல்லாத தம்பதியினரின் ஏக்கத்தையும், பொருளாதார தேவையுள்ள பெண்களின் மனநிலையையும் இப்படம் ஒரளவு சொல்கிறது. இருந்தாலும் நிறைய லாஜிக் மீறல்கள் உள்ளது.

படத்தில் நட்டி ஆரம்ப காட்சியில் பய பக்தியுடன் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடுகிறார். அதன் பிறகு சில காட்சிகளில் அருவருப்பான செயல்களையும், கெட்ட வார்த்தைகளையும் பேசுகிறார். மக்களின் உணர்வுகளை காயப்படுத்த கூடாது என்பதை இந்த இயக்குனர்கள் என்றுதான் புரிந்து கொள்ள போகிறார்களோ?

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com