ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்

‘தி ஐ’ ஹாலிவுட் படத்தில் ஸ்ருதிஹாசன்!

நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கும் 'தி ஐ' என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தற்போது கிரீஸ் நாட்டில் நடைபெறுகிறது.

எமிலி கார்ல்டன் எழுதி, டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் தயாராகும் 'தி ஐ' எனும் படத்தை, ஃபிங்கர் பிரின்ட் ஃபிலிம்ஸ் மற்றும் அர்கோனாட்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படப்பிடிப்பு தற்போது கிரிஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் மற்றும் கோர்பு ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இதில் கதையின் நாயகியான ஸ்ருதிஹாசன்  கலந்து கொண்டிருக்கிறார்.

நடிகை ஸ்ருதிஹாசன், 'டிரெட்ஸ்டோன்' எனும் ஹாலிவுட் தொலைக்காட்சித் தொடரின் முக்கிய வேடத்தில் நடித்து, சர்வதேச அளவில் அறிமுகமானார்.

‘தி ஐ’ படம் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், ‘’இந்த ஹாலிவுட் திரைப்படம் உளவியல் திரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது. இக்கதைப்படி நான் ஒரு விதவைப் பெண், எனது கணவரின் மரணத்துக்குப் பிறகு அவருடைய சாம்பலைக் கரைப்பதற்காகக் கிரேக்கத் தீவு ஒன்றுக்குப் பயணிக்கிறேன். அப்போது ஏற்படும் உளவியல் சார்ந்த திகில் திருப்பங்களும், சம்பவங்களும்தான் படத்தின் கதை’’ என்றார்.

இந்தத் திரைப்படத்தில் கதையின் நாயகியான ஸ்ருதிஹாசனுடன் 'தி லாஸ்ட் கிங்டம்' மற்றும் 'ஒன் டே' ஆகிய படங்களில் நடித்த பிரபல நடிகர் மார்க் ரௌலி, 'ட்ரூ ஹாரர்' படப் புகழ் நடிகை அன்னா சவ்வா, 'தி டச்சஸ்' படப் புகழ் நடிகை லிண்டா மார்லோ உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இதனிடையே WWF எனப்படும் (World Wildlife Fund for Nature) வனவிலங்குகளை இயற்கையாக பாதுகாப்பதற்கான நிதியம் எனும் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவன அமைப்பின் இந்திய பிராந்தியத்திற்கான விளம்பரத் தூதுவராக நடிகை ஸ்ருதிஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com