சிம்புவின் மாநாடு ரிலீஸ்: தடைகளை உடைத்து வெளியானது!

சிம்புவின் மாநாடு ரிலீஸ்: தடைகளை உடைத்து வெளியானது!

நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவான 'மாநாடு' படம் ரிலீஸாவதில் ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்து ஒருவழியாக இன்று ( நவம்பர் 26) ரிலீஸானது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம். தீபாவளியன்று ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டது. ஆனால், ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் என்று அறிவிக்கப் பட்டதால், 'அண்ணாத்த' படத்துடன் மோத முடியாமல் மாநாடு வெளியீடு தள்ளிப் போனது. இப்படம் நவம்பர் 25ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தியேட்டரில் சென்றூ படம் பார்க்க வேண்டுமானால் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டிருப்பது அவசியம் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில்தான் பணப் பிரச்சினை காரணமாக இந்த படத்தை வெளியிடுவதில் சிக்கல்கள் எழுந்தது. ''என் படத்தை வெளியிட விடாமல் நெருக்கடிகள் ஏற்படுகிறது'' என்று மாநாடு அறிமுக நிகழ்ச்சியில் சிம்பு உடைந்து அழுதார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தலையீட்டின் பேரில் 'மாநாடு' திரைப்படத்துக்கான உரிமத்தை 6 கோடி ரூபாய் கொடுத்து கலைஞர் டிவி வாங்கியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மேலும் சில திரைப்புள்ளிகளும் பணம் கொடுத்து உதவ, ஒரு வழியாக கடன் பிரச்சினைகள் தீர்ந்து மாநாடு இன்று ரிலீஸாகியுள்ளது,

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com