
சமீபத்தில் வெளியான நித்தம் ஒரு வானம் படத்தின் போஸ்டர் பல்வேறு ரசிகர்களை ஈர்த்துள்ளது. நடிகை சிவாத்மிகா மீனாட்சி என்ற பெயரில் ஒரு பயம் கலந்த பார்வையில் கல்லூரியில் அமர்ந்திருக்கிறார்.ரிது வர்மா சுபா என்ற பெயரில் மகிழ்வுடன் இருக்கிறார்.
அபர்ணா பால முரளி, மதி என்ற பெயரில் கம்பீரமாக டிராக்டர் மீது அமர்ந்து இருக்கிறார். ரா.கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார். அசோக் செல்வன் நடிக்கிறார். இது பெண்கள் வாழ்வியலை பற்றி பேசும் படமா?அல்லது காதல் படமா என்று பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
பெண்களை முன்னிலை படுத்தும் படமாக இருந்தால் மகிழ்ச்சியே. பெண்களை கவர்ச்சியாக காட்டும் சினிமாகள் தான் அதிகம். இதிலிருந்து நித்தம் ஒரு வானம் மாறுபட்டு இருக்கும் என எதிர்பார்ப்போம்.