வந்துட்டார்யா,வந்துட்டாரு! வடிவேலு ரிடர்ன்ஸ்!

வந்துட்டார்யா,வந்துட்டாரு! வடிவேலு ரிடர்ன்ஸ்!

– ராகவ்குமார்

மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்களுக்கு , மனதில் சொல்ல முடியாத சோகம் இருக்கும். சார்லீ சாப்ளின் , லாரல் ஹாட்லி முதல் கலைவாணர் வரை இந்த பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. இந்த லிஸ்டில் தற்சமயம் நமது வகை புயல் வடிவேலுவும் சேர்ந்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்பு குறைந்தாலும் மீம்ஸ் மூலம் நம்மை சிரிக்க வைக்கும் வடிவேலுவுக்கு என்ன சோகம் இருக்கப் போகிறது என்று நமக்கு நினைக்க தோன்றலாம் .சில நாட்களுக்கு முன்பு ஒரு விழாவில் பேசிய வடிவேலு கடந்த சில வருடங்களாக தான் சொல்ல முடியாத சோகத்தில் இருப்பதாகவும் ஆனால் தான் இதை வெளியில் சொல்ல விரும்பவில்லை எனவும் கூறினார் இந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் பிரச்சனையால் மக்கள் படும் துன்பத்தை விட தான் படும் சோகம் பெரிய விஷயமல்ல என்பதால் சோகத்தின் காரணத்தை சொல்லவில்லை என்று கூறி விட்டார் .கடந்த பத்து ஆண்டுகளில் நிறைய படங்களில் நடிக்கவில்லை என்பதை மனதில் வைத்து சொன்னாரா என்று புரியவில்லை.

எது எப்படியோ..ஆட்சி மாற்றம் வந்த பின்பு வடிவேலு திரை வாழ்க்கையிலும் மாற்றம் வந்துவிட்டது .லைக்கா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் வடிவேலு நடிக்கிறார் சுராஜ் இப்படத்தை இயக்குகிறார் பிரமாண்டமாக உருவாக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் கோவா இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடக்க உள்ளது. ரீ என்ட்ரி பிரம்மாண்ட எண்ட்ரியாக அமையவுள்ளது வடிவேலுவுக்கு. இனி அவர் சோகம் மறைந்து தானும் சிரித்து நம்மையும் சிரிக்க வைப்பார் என எதிர்பார்போம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com