CM dashboard: அரசுத்துறை அலுவல்களை முதல்வர் நேரடியாக கண்காணிக்க புதிய திட்டம் துவக்கம்!

CM dashboard: அரசுத்துறை அலுவல்களை முதல்வர் நேரடியாக கண்காணிக்க புதிய திட்டம் துவக்கம்!

தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் "CM Dashboard" என்ற புதிய திட்டம் நாளை தொடங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் "CM Dashboard" என்ற புதிய திட்டம் நாளை தொடங்கப்பட உள்லது. இத்திட்டத்தின் மூலம் அரசின் அனைத்துத்துறை அலுவல்களையும் முதல்வர் தன் அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்க முடியும். அந்தவகையில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகையை (CM dashboard) திட்டத்தை முதல்வர் மு..ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

தமிழ்நாடு 360 என்ற தமிழ்நாடு அரசின் துறை சார்ந்த தகவல்களை மக்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் வகையிலும், திட்டங்கள், அறிவிப்புகளின் மீதான நடவடிக்கை குறித்த கண்காணிப்பு மற்றும் அடுத்த தலைமுறை ஆட்சி நிர்வாகத்தை எடுத்து செல்லும் வகையிலும் இந்த 'முதல்வர் தகவல்பலகை' உருவாக்கப்பட்டுள்ளது. இதனை நாளை முதல்வர் பயன்படுத்தத் தொடங்குகிறார்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com