காங்கிரஸ் எம்.பி-யை நிற்க வைத்துப் பேசிய ஆட்சியர்: தலைமைச் செயலர் கண்டித்து எச்சரிக்கை!

காங்கிரஸ் எம்.பி-யை நிற்க வைத்துப் பேசிய ஆட்சியர்: தலைமைச் செயலர் கண்டித்து எச்சரிக்கை!

தமிழக காங்கிரஸ் எம்.பி. டாக்டர் விஷ்ணுபிரசாத் சில பிரச்சனைகள் குறித்து தகவல் கேட்டறிவதற்காக சென்னை கலெக்டர் விஜயராணியை சந்தித்தார். அப்போது சுமார் ஒன்றரை மணிநேரம் எம்.பி.யை நிற்க வைத்துப் பேசி கலெக்டர் விஜயராணி அவமதித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படும் தகவல்:

சென்னை கலெக்டர் விஜயராணி தன்னை சந்திக்க வந்த காங்கிரஸ் எம்.பியான விஷ்ணுப்ரசாத்தின் அடையாள அட்டையை பார்த்தபின்பும், அவரை அமரச் சொல்லாமல், நிறக வைத்தே பேசி அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து விஜயராணிமீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் பிரச்சனையை எழுப்ப விஷ்ணுபிரசாத் முதலில் ஆலோசித்து, பின்னர் தமிழக தலைமை செயலர் இறையன்புவுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதகவலை அறிந்து அதிர்ச்சியடைந்த இறையன்பு, கலெக்டர் விஜயராணியை தொடர்புகொண்டு உடனடியாக எம்.பி. விஷ்ணுபிரசாத்திடம் மன்னிப்புக் கேட்கும்படியும், தவறினால் இதுதொடர்பான பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்ததாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து கலெக்டர் விஜயராணி உடனடியாக எம்.பி.யை சந்தித்து மன்னிப்பு கேட்டதாகச் சொல்லப்படுகிறது. இச்சம்பவம் தமிழக ஐ..எஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com