கார்ன் பராத்தா

கார்ன் பராத்தா

வி. ஸ்ரீவித்யா, நங்கநல்லூர்.

தேவை:

கார்ன் – 1 கப்

உருளைக்கிழங்கு– 2

வேகவைத்தது பீன்ஸ்,குடை மிளகாய், கேரட்தலா ஒரு டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி தலா ஒரு டேபிள் ஸ்பூன்

கொத்த மல்லிவிருப்பப்பட்டால்

பேபி கார்ன் ஒரு டேபிள் ஸ்பூன் துருவியது.

உப்புதேவையான அளவு

கரம் மசாலா தூள்அரை டேபிள் ஸ்பூன்

கோதுமை மாவுதேவைக்கேற்ப.

செய்முறை

ஸ்டப் செய்ய வேண்டிய காய்கறி களை கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக மசிய பிசைந்து சிறு சிறு உருண்டை களாக பிடிக்கவும் கோதுமை மாவு மற்றும் உப்பு, ஓமம் தண்ணீர் சேர்த்து கையில் ஒட்டாமல் 1/2 மணி நேரம் பிசைந்து ஈரத்துணிபோட்டு மூடி வைக்கவும். அரைமணி நேரம் கழித்து, பூரி அளவு திரட்டி,நடுவில் காய்கறி உருண்டை களை வைத்து மூடி மீண்டும் பார்த்தா களாக இடவும். ஒவ்வொன்றாக தோசைக்கல்லில் நெய் விட்டு சுடவும். பெரியவர் களுக்கு எனில் எண்ணெய் கூட இல்லாமல் சுடவும். மாலை நேரத்தில் எளிய முறையில் செய்யக்கூடிய சிற்றுண்டி இது தொட்டுக்கொள்ள எதுவும் தேவைப்படாது குழைந்தகளுக்கு தக்காளி சாஸ் செம காம்பினேஷன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com