கொரோனா 4-வது அலையால் ஒமைக்ரான் பரவல்: தென்னாப்பிரிக்க சுகாதாரத்துறை அமைச்சர்!

கொரோனா 4-வது அலையால் ஒமைக்ரான் பரவல்: தென்னாப்பிரிக்க சுகாதாரத்துறை அமைச்சர்!

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா 4-வது அலை காரணமாக ஒமைக்ரான்  வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜோ பாஹ்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்ததாவது:

தென்னாப்பிரிக்காவில் கொரோனா 4-வது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 9 மாகாணங்களில் 7-ல் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.  ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மக்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஒன்றே சிறந்த வழி! கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்காமலேயே நான்காவது அலையை கட்டுக்குள் கொண்டு வந்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்..

ஒமைக்ரான் கொரோனா வைரஸ், கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com