0,00 INR

No products in the cart.

கிரெடிட் கார்டில் பொருட்கள் வாங்கினால் இன்று முதல் சேசை வரி! எஸ்.பி.ஐ வங்கி அறிவிப்பு!

நாட்டின் பெரிய பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வங்கியின் கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் அனைத்து EMI பரிவர்த்தனைகளுக்கும் இன்றுமுதல் செயலாக்கக் கட்டணம் மற்றும் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்ததாவது:

எஸ்.பி.ஐ வங்கியின் கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் அனைத்து EMI பரிவர்த்தனைகளுக்கும் இன்று முதல் செயலாக்கக் கட்டணம் மற்றும் வரி விதிக்கப்படும். சமீபத்திய நடவடிக்கையாக, எஸ்பிஐ கார்ட்ஸ் & பேமென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (SBICPSL) செயலாக்கக் கட்டணமாக ரூ.99 வசூலிக்கப்படுகிறது. இதற்கான வரி விதிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. அந்த வகையில் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் செய்யப்படும் அனைத்து EMI பரிவர்த்தனைகளுக்கும் கடன் வழங்குபவர் இந்தச் செயலாக்கக் கட்டணத்தை வசூலிப்பார். மேலும் அமேசான், பிளிப்கார்ட், மிந்த்ரா போன்ற இகாமர்ஸ் இணையதளங்களுக்கும் இது பொருந்தும். இது குறித்து எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிப்பு அனுப்பப்பட்டது.

இவ்வாறு எஸ்.பி.ஐ வங்கி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

தமிழகத்தில் புதிய வகை கொரோனா; மாஸ்க் கட்டாயம்!

0
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 4-வது அலை பரவியுள்ளதாக கருதப்படுகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் கொரோனா அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், தமிழகத்தில் புதிய...

டெல்லி சென்றார் ஓபிஎஸ்!

0
அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை குறித்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில் நேற்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்திலுள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.  அதிமுக-வில் ஒற்றைத் தலைமை கருத்துக்கு தீவிர...

திரௌபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல்!

0
நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தலில் பாஜக-வுடனான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு இன்று அப்பதவிக்கான தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை...

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி; நெல்லை அணி அபாரம்!

0
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம், கோவை ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறுகிறது....

கல்யாணத்தில் கலாட்டா: நண்பனைச் சுட்ட மணமகன்!

0
உத்தரபிரதேசத்தில் திருமணக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, மணமகன் துப்பாக்கியால் சுட்டதில் அவரது நண்பர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் பிராம்நகரைச் சேர்ந்தவர் மணீஷ் மதேஷியா (25). இவருக்கும் அதே...