கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன!

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை தீபிகா பல்லிகல் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:

நானும் தீபிகாவும் இரட்டை ஆண் குழந்தைகளுக்குப் பெற்றோர்களாக ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். இக்குழந்தைகளுக்கு கபிர் பலிக்கல் கார்த்திக், சியான் பலிக்கல் கார்த்திக் என்று பெயரிட இருக்கிறோம்.

இவ்வாறு தினேஷ் கார்த்திக் தன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த பிரபல விளையாட்டு ஜோடிக்கு சமூக வலைதளத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினேஷ் கார்த்திக் மற்றும் தீபிகா பல்லிகலுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 36 வயதான தினேஷ் கார்த்திக் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com