கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாகூரின் திருமண நிச்சயதார்த்தம்: வைரலாகும் போட்டோ!

கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாகூரின் திருமண நிச்சயதார்த்தம்: வைரலாகும் போட்டோ!
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூரின் திருமண நிச்சயதார்த்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வேகப் பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர், இதுவரை இந்திய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகள், 15 ஒருநாள் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். பவுலிங், பேட்டிங் என்று அனைத்திலும் தூள்கிளப்புகிறார். அதேபோல் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாகவும் ஷர்துல் தாகூர் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று ஷர்துல் தாகூருக்கு அவரது நீண்ட நாள் காதலியான மித்தாலி பருல்கருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மும்பையில் நடைபெற்ற இந்த விழாவில் இரு குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட 75 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதில் இந்திய அணியின் டி20 கேப்டனான ரோஹித் ஷர்மா நேரில் சென்று ஷர்துல் தாகூருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஷர்துல் தாகூரின் திருமணம் அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை முடிந்தபின் நடைபெறும் என ஷர்துல் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com