சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய ஆட்சியர்: குவியும் பாராட்டு!

சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய ஆட்சியர்: குவியும் பாராட்டு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் கவிதா ராமு, நகரிலுள்ள முக்கிய பகுதிகளுக்கு சைக்கிளில் பயணம் செய்து ஆய்வுமேற்கொண்டார்.

தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாநிலத்தில் இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் கவிதா ரா, புதுக்கோட்டை நகரில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு சைக்கிளிலேயே பயணம் செய்து, தனியாக ஆய்வு மேற்கொண்டார். சாலையில் முகக் கவசம் அணியாமல் சென்ற இளைஞர்களை முகக்கவசம் அணியுமாறூ அறிவுரை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவின் இந்த சைக்கிள் பயணத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com