0,00 INR

No products in the cart.

200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய சின்னா மரணம்

முந்தானை முடிச்சு, தூரல் நின்னு போச்சு, தாவணி கனவுகள், அமராவதி, வைதேகி காத்திருந்தாள், வானத்தை போல, செந்தூர பாண்டி, நேசம் உட்பட 200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய சின்னா வயது 69 இன்று மரணமடைந்தார்

இவர் ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தபோது இவருக்கு நடனம் வராது என்று கூறி இவரை திரைத்துறையை விட்டே ஒதுக்க நினைத்த சிலர், காலப்போக்கில் இவரை அழைத்து ‘நீ தான் இந்த நடனத்தை ஆட வேண்டும்’ என அழைத்தார்கள்.

தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு இப்படி பாக்கியராஜ் இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற படங்களுக்கு நடன இயக்குநராக இருந்தவர் சின்னா. 300 படங்களுக்கு மேல் நடனக் குழுவில் உதவியாளராக இருந்து நடன அமைப்புக்களும் செய்துள்ளார். சேஷூ மாஸ்டர் (சங்கராபரணம் படத்தின் டான்ஸ் மாஸ்டர்), பசுமர்த்தி கிருஷ்ணமூர்த்தி, சலீம், வேம்பட்டி சத்தியம் போன்றவர்களிடம் வேலை பார்த்தவர்.

ஆந்திர மாநிலம் ஜங்கா ரெட்டி கூடம் இவரது சொந்த ஊர். இவருடைய தந்தை ஐதராபாத்திலுள்ள இசைக்கல்லூரியில் முதல்வராக இருந்தவர். பல வருஷங்கள் எப்படி, எப்படியோ என்னென்ன வேலைகளையெல்லாமோ பார்த்து கடைசியாக சேஷூ மாஸ்டரிடம் உதவியாளனாக சேர்ந்தார். இவருக்கு இனிய வாழ்வு இயக்குநர் பாக்கியராஜ் அவர்களின் வடிவத்தில் வந்தது. பல ஆண்டுகள் இவரது திறமையை உன்னிப்பாக கவனித்து வந்த பாக்கியராஜ் ‘’தூறல் நின்னு போச்சு’’ படத்தில் இவரைத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அதை டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு படங்களில் இவருக்கு வாய்ப்பளித்தார். பாக்கியராஜ் சொந்தமாக தயாரித்த ‘தாவணிக்கனவுகள்’ படத்திற்கும் இவர் தான் நடன இயக்குநர்.

இது போக ‘வாங்க மச்சான் வாங்க’, ‘உன்னை விட மாட்டேன்’, ஆர்.சுந்தர ராஜனின் இயக்கத்தில் ‘என்னைத் தெரிஞ்சா சொல்லாதீங்க’ போன்ற பல படங்களுக்கு நடன இயக்குநராக இருந்துள்ளார். மேலும் புவனேஸ்வரி, நாகலெட்சுமி, லட்சுமி ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி,அம்மன் சீரியல்களில் நடித்த நடிகை ஜெனிபர் இந்த நடன இயக்குனர் சின்னாவின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

இளைஞர் வாழ்வுதனை கவ்வும் ஆன்லைன் சூதாட்டம்! 

0
-தனுஜா ஜெயராமன்    மகாபாரதத்திலேயே சூதினால் பஞ்ச பாண்டவர்கள் இழந்தது ஏராளம் எனில் சூதின் கொடுமைகளை இதைவிட விளக்கமாக யாராலும் சொல்லிவிட முடியாது.   சீட்டாட்டம் ,குதிரைபந்தையம், லாட்டரி சீட்டுகள்  என பல்வேறு காலகட்டங்களில் வாழ்க்கையை சீரழிக்கும் பல...

பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸார் கைது! 

0
டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டதில், நாடு முழுவதும்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  நாட்டில் அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி...

சினிமா டப்பிங் கலைஞர்கள் நடத்திய கிரிக்கெட் போட்டி! 

0
-லதானந்த்   தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சிக் கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் (SICTADAU) டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் பிரீமியர் லீக்  (DPL) SICTADAU கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில்...

சதுரங்கத்தில் வென்று சக்தியை மணந்த ஈசன்!

0
-பிரமோதா, சக்தி.சாமிநாதன். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (ஜூலை 28) நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்குகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது ‘’தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பூவனூர் சதுரங்க...

சிவரஞ்சனியும் லஷ்மி பிரியாவும்!

0
-தனுஜா ஜெயராமன். இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகளில்  தமிழ்படங்கள் மட்டுமே ஒன்பது விருதுகளை வென்றுள்ளது மகிழ்ச்சியான சேதி! கொரானாவால் சற்று தொய்வடைந்திருக்கும் தமிழ்த் திரையுலகுக்கு இந்த விருதுகள் நம்பிக்கையும் உற்சாகமும் தருகின்றன.   "சிவரஞ்சனியும்...