0,00 INR

No products in the cart.

கருப்பன் கோயிலில் மகாசிவராத்திரி திருவிழா!

ஆர்.வி.ராமானுஜம்

குலதெய்வம் வரிசையில் கருப்பணசாமி அல்லது கருப்பர் என்ற காவல் தெய்வமும் ஒன்று. அழகர்மலையில் அருள்புரியும் 18ஆம் படி கருப்பர் தொடங்கி, சந்தன கருப்பன், சங்கிலி கருப்பன், ஆயிரம் அருவாள் கோட்டை கருப்பன் எனப் பல்வேறு பெயர்களில், பல்வேறு மாவட்டங்களில் அற்புதங்களோடு அருள்பாலிக்கும் காவல் தெய்வம் இவர். அவ்வகையில். சிவகங்கை மாவட்டம், இளையாத்தங்குடியில் அருளும் கருப்பணசாமி குறிப்பிடத்தகுந்தவர்.

தேவர்கள் இளைப்பாற வந்த இடம் இளையாற்றங்குடியாகும். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் போற்றி வாழும் புனித பூமி. ந்தத் தலத்தில் அமைந்த நித்ய கல்யாணி அம்பிகை சமேத கயிலாசநாதர் திருக்கோயில் கலைநயம் கொண்ட சிற்பத் தூண்கள் மற்றும் சுவாமி விக்ரஹங்களுடன் எழிலாக விளங்குகிறது. இக்கோயில் விநாயகர் கயிலாய விநாயகர், தல விருட்சம் புளிய மரம் மிகவும் புராதனமானது. இதன் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவது விசேஷம். இக்கோயில் திருக்குளத்தின் தெற்கு கரையில் அமைந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் பெரிய கருப்பர், சின்ன கருப்பர் தனிச் சன்னிதி கொண்டு அருள்புரிகின்றனர்.

மலையாள கருப்பர்’ என்று அழைக்கப்படும் பெரிய கருப்பர் தனிச் சன்னிதியில் நின்ற கோலத்தில் எடுப்பான மீசையுடன், வீரனுக்கு உரிய ஆடை, காதில் குண்டலம், வலது கரத்தில் அரிவாள், இடது கரத்தில் கதை, காலில் வீரக் கழல், தலையில் தொப்பி என அலங்காரத்துடன் காட்சி தருகிறார். அவருக்கு இடதுபுறம் சின்ன கருப்பர் நின்ற திருக்கோலத்தில் விளங்குகிறார். இருவருக்கும் ஒரே விமானம் கொண்ட சன்னிதி.

காவல் தெய்வ கோயில்கள் ஊரின் எல்லையில் அமைக்கப்படுவது ஆகம விதி. அன்றைய நாளில் இக்கோயிலே ஊரின் எல்லையாக இருந்திருக்கலாம். சின்ன கருப்பர், பெரிய கருப்பர் இருவரும் ராமாயணக் காலத்தில் அல்லது அதன் தொடர்பாக நேரத்தில் தமிழகப் பகுதிகளில் வழிபாட்டு தெய்வமாகக் கோயில் கொள்ள ஆரம்பித்ததாக வரலாறு. இருவரும் ராம லட்சுமணர்கள்தான் என்று நம்புகிற வழக்கம் பாண்டி நாட்டுப் பகுதிகளில் இன்றும் உள்ளது.

ருப்பர் கோயில்களில் விஷ்ணு (வைஷ்ணவ) தொடர்பான எந்தப் பண்டிகைகளும், விழாக்களும் கொண்டாடப்படுவது கிடையாது. ஆனால், மகாசிவராத்திரியன்று அருள் சொல்லும் (குறி சொல்லுதல்) வழக்கம் இந்த கருப்பர் கோயிலில் ஒரு நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
சிவன் விஷ்ணு இருவருக்குமான இந்தத் திருவிழாவில் சாமியாடிகள் மீது கருப்பர் மற்றும் தெய்வங்களின் சக்தி இறங்கும்போது அங்குள்ள பக்தர்கள், கோவிந்தா’ என கோஷம் எழுப்புவது வழக்கம்.

அங்காள பரமேஸ்வரி அம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன், இடது காலை மடங்கி, வலது காலை தொங்க விட்ட நிலையில், சுகாசனத்தில் காட்சி தருகிறார். வலது கரத்தில் வாளும், இடது கரத்தில் கபாலமும் ஏந்தியுள்ளார். பின்னிரு கரங்களில் சூலம் உள்ளது. அம்மனின் திருக்கரத்தில் உள்ள வாள் மிக நீண்டதாக உள்ளது. இக்கோயில் சிவராத்திரி திருவிழாவில், வாள் நிறுத்தல்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த அம்மன் ருத்ர தேவதை என்பதை உணர்த்தும் விதமாக, வாயின் இருபுறமும் கோரைப்புற்களுடன் அக்னி மகுடம் பூண்டுள்ளார்.

இக்கோயிலில் மகா சிவராத்திரி கடந்த நூறு ஆண்டுகளாக ஆறு நாட்கள் திருவிழாவாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாட்களில் அம்மனுக்கு தினசரி பலவித திரவியங்களால் அபிஷேகம், பச்சை வாழை பரப்புதல், திருவீதி உலா என கோலாகலமாகத் திகழும்.

கோயில் பூசாரிகள் வீர சைவ நெறி சார்ந்தவர்கள். ‘பாட்டையா’ என்ற பூசாரி மரபினர். இப்போது பூசாரியாக லட்சுமண பூசாரி உள்ளார். இதற்கு முன்பு இவரது தந்தை, சகோதரர் இருந்தனர். இது வழி வழியாக வரும் பொறுப்பு. இக்கோயிலில் அருள்புரியும் தெய்வங்கள் ஒவ்வொன்றும் ஒரு சாமியாடி மேல் அருளாக இறங்கி வருவது வியப்பு. ஒரு சாமியாடியின் வாழ்நாள் காலம் முடிந்ததும், அதே தெய்வம் வேறு ஒரு பக்தரின் மீது இறங்கி வரலாம். அதற்கும் பலவித சோதனைகள் செய்து, உறுதி செய்த பின்னர் அவரை அந்த தெய்வத்தின் சாமியாடி என அங்கீகரிப்படுகிறது.

தற்போது விழுப்புரம், மேலச்சிவபுரியைச் சேர்ந்த ஆ.பழ.சொ.பஞ்சநதம் அவர்களின் குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளாக ஆறாம் நாள் திருவிழாவை நடத்தி வருகின்றனர். இந்தப் பெரியவர் மீது சின்ன கருப்பர் அருள் இறங்கி பக்தர்களுக்கு குறி சொல்லி, வழி நடத்தி வருகிறார். சன்னிதியின் முன் நின்று இவர் கூறும் அருள்வாக்கு பலரை மகிழ்வோடு, சிறந்து ஓங்கி வாழ வைத்துள்ளதாம். ஆறு நாள் திருவிழா நகரத்தாரை மட்டுமின்றி, அவர்கள் மூலம் அங்காள பரமேஸ்வரி, கருப்பசுவாமி கோயிலுக்கு பல குடும்பங்களை ஆண்டுதோறும் தொடர்ந்து வருகின்ற அளவில் உத்தரவு ஆகியுள்ளது.

ளையாத்தங்குடியின் சிறப்பாக, ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் 65வது பீடாதிபதியாக கி.பி.1851 முதல் 1890வரை 39 ஆண்டுகள் அருளாட்சி புரிந்த
ஸ்ரீ மகாதேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் முக்தி அடைந்து இங்கு அதிஷ்டானமாக அருள்பாலிக்கிறார். மேலும், காஞ்சி மடத்தின் 68வது பீடாதிபதி மகா பெரியவர் ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், 69வது பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி சுவாமிகளுடன் 1961-62களில் பல மாதங்கள் இங்கு தங்கி பூஜை செய்து, சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடித்து உள்ளனர். இந்தக் கோயிலில் இந்த ஆண்டு மகாசிவராத்திரி திருவிழா வரும் 27.02.2022 தொடங்கி 04.03.22 அன்று நிறைவு பெறுகிறது.

எங்கெங்கு இருந்திங்கே எவர் வந்து நின்றாலும் ஏற்ற வரம் ஈந்து நிற்பாய்!மண்ணில் உனை நம்பியவரை மேலோர், கீழோர் என்றும்
மனமாற்றம் கொள்ள மாட்டாய்!
வந்துன் முன் முறையான கோரிக்கை வைப்போர்க்கு மாறாத வெற்றி தருவாய்!’

என்ற வரிகள் இக்கோயிலில் பாடப்படும் பல பாடல்களில் உள்ளது. இது நிதர்சன உண்மையும் ஆகும்.

அமைவிடம் : புதுக்கோட்டை திருப்பத்தூர் சாலையில் 40 கி.மீ. கீழ்செவல்பட்டி சென்று, அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் இளையாத்தங்குடியை அடையலாம்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

வாழவைக்கும் வைத்திய நரசிம்மர்!

0
- ராமசுப்பு ‘ஸ்ரீ நரசிம்மர்’ என்ற சிங்கமுக அவதாரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. பிறப்பின்றி ஒரு நொடிப்பொழுதினிலே தனது பக்தன் பிரஹலாதனைக் காப்பாற்றவும், அதேசமயம் ‘பகவான் விஷ்ணு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து இருக்கிறார்’ என்று...

கடன் தீர்க்கும் கயிலைநாதர்!

0
- பழங்காமூர் மோ.கணேஷ் ‘கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது ஆன்றோர் வாக்கு. கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச்சிறந்த பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருவண்ணாமலை மாவட்டம், பெரணம்பாக்கம் ஸ்ரீ ருணஹரேஸ்வரர் திருக்கோயில். வாழைப்பந்தலில் அன்னை பராசக்தியின்...

சிவா-விஷ்ணு கோபம் தணித்த சாந்ததுர்கா!

0
- லதானந்த் துர்கையம்மன் கோபத்துடன் அரக்கர்களை அழிப்பவர் என்பது பொதுவான கருத்து. ஆனால், கோவாவில் எழுந்தருளியிருக்கும் துர்கையம்மன் சாந்தமே வடிவானவர். அதனால் இவர், ‘சாந்ததுர்கா’ என அழைக்கப்படுகிறார். உள்ளூர் மக்கள் இந்த அம்மனை, ‘சாந்தேரி’...

கஜாரூடராகக் கந்தவேலன்!

0
- பழங்காமூர் மோ.கணேஷ் குன்றுகள் என்றாலே குகனுக்கு குதூகலம்தான். அந்தக் குன்றுகளில் குமரன் புரிந்த விளையாடல்களோ ஏராளம். அதிலும் கந்தன் வள்ளியை மணம் முடித்த தணிகாசலமும், அதையொட்டி வள்ளி கல்யாணத்திற்கு தொடர்புடைய திருத்தலங்களும் எண்ணற்றவை....

பிரம்மா வணங்கிய ஸ்ரீ மங்கேஷி!

0
- லதானந்த் எழில்மிகு கடற்கரைகள், நீர் விளையாட்டுக்கள், பன்னாட்டு உணவுகளைத் தரும் உணவகங்கள் என சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவரும் கோவா மாநில வட பகுதியில், பாண்டா தாலுகாவின் மங்கேஷி கிராமத்தில் ஆன்மிக அருள் பரப்பி...