கேட்டேன்; ரசித்தேன்!

கேட்டேன்; ரசித்தேன்!
Published on

பணிவு

ண்ணீர் இறைக்கும் ஏற்றம் பணிவதனால்தான் கிணற்றிலுள்ள நீரை முகர்கிறது. அதுபோல், ஆன்றோர்களிடம் பணிந்தால் அவர்களிடம் தேங்கிக்கிடக்கும் அறிவு வெள்ளத்தை நாம் முகர்ந்து கொள்ளலாம்.

கூப்பிடும் தொலைவும்; எட்டிய தொலைவும்!

ஜேந்திரன் மகாவிஷ்ணுவை நினைத்துக் கூப்பிட்டான். உடனே விஷ்ணு ஓடி வந்தார். அதனால் வைகுண்டம் கூப்பிடும் தொலைவுதான். மார்கண்டேயன் கைக்கெட்டிய தொலைவில் இருந்த சிவலிங்கத்தைத் தழுவிக் கொண்டான். உடனே சிவபெருமான் தோன்றினார். அதனால் கயிலாயமும் கைக்கெட்டும் தொலைவுதான். ஆனால், முருகப்பெருமானை கூப்பிடவோ அல்லது கையை நீட்டித் தழுவவோ வேண்டாம். அவனை ஒருக்கால் நினைத்தாலே போதும்; அவனுடைய இரு காலும் உடனே தோன்றும்.

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவிலிருந்து

கொழுக்கட்டை

விநாயகருக்குக் கொழுக்கட்டையைப் படைப்பதில் தத்துவம் ஒன்று அடங்கி உள்ளது.
ஓர் ஆன்மிக சாதகனின் உடல் நல்ல வளமாகவும் உரமாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக கொழுக்கட்டையின் மேல் பகுதி விளங்குகிறது. அதன் உள்ளே இருக்கும் பூரணம், ஆன்மிக சாதகனின் மனம் இனிமையுடன் விளங்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. மேலும், கொழுக்கட்டை எண்ணெய் கலவாமல் ஆவியில் வேகும் நல்ல சத்துணவாகும்.

சுவாமி கமலாத்மானந்தர் சொற்பொழிவிலிருந்து

நல்லவரும்; தீயவரும்!

பாண்டவர்கள் ஐந்து பேர். கௌரவர்கள் நூறு பேர். முற்காலத்திலேயே நல்லவர்கள் ஐந்து பேர்களும், தீயவர்கள் நூறு பேர்களும் இருந்துள்ளார்கள். இக்காலத்தில் கேட்க வேண்டுமா?

ஸ்ரீ ராமஜெயம்

முதன்முதலில் 'ஸ்ரீராமஜெயம்' எழுதியவர் ஆஞ்சனேயர்தான். ராம ராவண யுத்தம் முடிந்த பிறகு, ஸ்ரீராமனின் வெற்றிச் செய்தியை அசோக வனத்தில் சீதா பிராட்டியிடம் சொல்ல வந்தார் ஆஞ்சனேயர். சந்தோஷ மிகுதியால் அவரால் சொல்ல முடியவில்லை. 'என்ன செய்தி ஆஞ்சனேயா?' என்று சீதை கேட்டதற்கு, 'ஸ்ரீராமஜெயம்' என்று மணலில் எழுதிக் காட்டினார் ஆஞ்சனேயப் பெருமான்.

புலவர் கீரன் சொற்பொழிவிலிருந்து

மவுன விரதம்

தினமும் இரண்டு மணி நேரம் மவுனமாக இருப்பது நல்லது. முடிந்தால் வாரத்தில் ஒரு நாள் மவுன விரதம் இருப்பது சாதனைக்கு மிகவும் நன்மை பயக்கும். மவுன விரதம் இருக்கும்போது மனதில் எண்ணங்கள் தோன்றலாம். ஆனால், சக்தி அவ்வளவாக நஷ்டமாவதில்லை. எப்போதும் ஓசை எழுப்பிக்கொண்டிருக்கும் புறாவின் ஆயுள் குறைவு. மாறாக, அமைதியாக இருக்கும் ஆமை அதிக நாட்கள் உயிர் வாழ்கிறது.

மாதா அமிர்தானந்தமயி சொற்பொழிவிலிருந்து

தொகுப்பு : நெ.இராமன், சென்னை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com