0,00 INR

No products in the cart.

ஸ்ரீ லக்ஷ்மி குபேர தீப வழிபாடு!

வீட்டில் செல்வம் பெருகவும், சேர்ந்த செல்வம் கரைந்திடாமல் காக்கவும் செய்ய வேண்டிய பூஜையே, ஸ்ரீ லக்ஷ்மி குபேர தீப வழிபாடு. இந்த பூஜையினால் செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் அருளையும் மகாலக்ஷ்மியின் அருளையும் ஒருசேரப் பெறலாம். குபேரன் தனது செல்வம் அனைத்தையும் இழந்து நின்றபோது ஸ்ரீ லக்ஷ்மி தேவியை வணங்கி குபேர எந்திரத்தைப் பெற்றதாக ஐதீகம்.

இந்த பூஜையை ஒன்பது வாரமோ அல்லது ஒன்பது மாதமோ தொடர்ந்து ஒரே நாளில் செய்ய வேண்டும். ஒன்பது வாரம் செய்ய நினைத்தால் வெள்ளிக்கிழமைகளில் இந்த பூஜையைச் செய்யலாம். அதுபோல், ஒன்பது மாதம் செய்ய நினைத்தால் பௌர்ணமி நாட்களில் செய்யலாம். இந்த பூஜையை ஒருவரே தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது முக்கியம். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வேறொருவர் இந்த பூஜையைத் தொடரலாம்.

பூஜை செய்ய தேர்ந்தெடுத்துள்ள நாளில் அதிகாலையில் நீராடி, பூஜை அறையில்
ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் படத்தினை வாசமுள்ள மலர்களால் அலங்கரித்து, குலதெய்வத்தை மனதார வேண்டி இரு பக்கமும் குபேர தீபம் ஏற்ற வேண்டும். அடுத்து, இந்த பூஜை தடைபடாமல் இருக்க மகாகணபதியை மனதார வேண்டியும், வீட்டில் செல்வம் பெருக குபேர லக்ஷ்மியை மனதார வேண்டியும் தீபாராதனை காட்ட வேண்டும். அர்ச்சனை செய்ய தாமரை மலர்கள் உகந்தவை. இந்த பூஜையில் ஒரே மாதிரியான மற்றும் ஒரே மதிப்பிலான ஒன்பது நாணயங்களை வைத்து வழிபட வேண்டும். பூஜையின்போது,

ஓம் யஷாய குபேராய வைஸ்ரவணாய
தனதான்யாதிபதயே தனதான்ய
ஸம்வ்ருத்திம்மே தேகி தாபய ஸ்வாஹா’

எனும் சுலோகத்தை 108 முறை கூறி வணங்க வேண்டும்.

இதேபோன்று அடுத்த வாரமோ அடுத்த மாதமோ சென்ற வாரம் அல்லது மாதம் வைத்த நாணத்தைப் போன்றே புதிய நாணயங்களை வைத்து இந்த பூஜையை தொடர்ந்து செய்யுங்கள். பூஜையின் முடிவில் ஒன்பது நாணங்களையும் ஒரு பெட்டியில் சேர்த்து வைத்திருக்க வேண்டும். ஒன்பது வாரம் அல்லது மாதத்தின் முடிவில் உங்களிடம் 81 நாணயங்கள் சேர்ந்திருக்கும். அதை அடுத்து வரும் வெள்ளிக்கிழமையன்றோ அல்லது பௌர்ணமியன்றோ சிவன் கோயில் உண்டியலில் சேர்த்து விட வேண்டும். ஈசனே செல்வம் அனைத்தையும் குபேரனுக்கு அளித்தவர். அதனாலேயே சிவன் கோயில் உண்டியலில் அந்த நாணயங்களைச் சேர்க்க வேண்டும்.

பின்பு, சுமங்கலிப் பெண்களுக்கு தங்களால் இயன்ற மங்கலப் பொருட்களை வைத்து தாம்பூலம் கொடுக்க வேண்டும். அப்போது மகாலக்ஷ்மியே ஏதாவது ஒரு சுமங்கலி ரூபத்தில் வந்து, நீங்கள் தரும் தாம்பூலத்தை ஏற்று, உங்களை ஆசிர்வதிப்பாள் என்பது நம்பிக்கை.

இந்த பூஜையை உண்மையான பக்தியுடன் தொடர்ந்து செய்து வர, துன்பங்கள், கடன் பிரச்னைகள், சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும்.

​​அடகு நகையை மீட்டுத் தரும் பூஜை!

கைகளை அடகு வைத்து பணம் பெறுவது பலருக்கு இயல்பான ஒன்று. சில சமயம் அடகு வைத்த நகையை குறித்த நேரத்தில் மீட்க முடியாமல் போய் விடுகிறது. இப்படி மீட்க முடியாத நகைகளை மீட்பதற்கான எளிய பரிகாரம் ஒன்றைக் காண்போம்.

பாற்கடலில் வாசம் செய்யும் மகாலக்ஷ்மியின் அம்சம் பொருந்தியது கல்லுப்பு. இந்தக் கல் உப்பை பூஜை அறையில் எப்போதும் ஒரு சிறிய பாத்திரத்தில் நிரப்பி வைத்திருப்பது மிகவும் நன்று. பூஜை செய்யும் நாளன்று மகாலக்ஷ்மியின் படம் அல்லது விக்ரகத்துக்கு முன்பு புதிதாக வாங்கிய கல் உப்பை அந்தப் பாத்திரத்தில் நிரப்பிக்கொள்ள வேண்டும். பூஜையில் அமர்ந்து தியான நிலையில் மகாலக்ஷ்மியை மனதார வேண்டிக்கொண்டு, மகாலக்ஷ்மியின் மந்திரங்களை உச்சரித்தபடி மஞ்சள் தூளை சிறிது எடுத்து முதலில் கொஞ்சமாக கல் உப்பின் மீது தூவ வேண்டும்.

அடுத்து, குங்குமத்தை இதேபோல செய்ய வேண்டும். ஒரு முறை இப்படி செய்தால் போதும். கல் உப்பு, மஞ்சள், குங்குமம் ஆகிய மூன்றும் மகாலக்ஷ்மியின் அம்சம் பொருந்தியவை ஆகும். இப்படிச் செய்துவிட்டு இரண்டு, மூன்று மணி நேரம் கழித்து அடகு வைத்த நகைகளை மீட்க வேண்டும் என்கிற பிரார்த்தனையோடு நீங்கள் நகை வைக்கும் இடத்தில் இந்த உப்பைக் கொண்டு போய் வைக்க வேண்டும்.

பெட்டி அல்லது பீரோவில் நகை வைப்பவர்கள், நகை இருக்கும் இடத்தில் இந்த உப்பைக் கொண்டு போய் வைத்து அதன் அருகில் மீதமுள்ள மற்ற நகைகளை வைக்க வேண்டும். இப்படிச் செய்ய, அடகு வைத்த நகையை மீட்பதற்கான பணம் எப்படியாவது விரைவில் உங்கள் கைக்கு தானாகவே தேடி வந்து சேரும். இந்தப் பரிகாரத்தை சூரிய உதயத்திற்கு முன்பு அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு நம்பிக்கை, பக்தி சிரத்தையோடு செய்ய வேண்டும். சூரியன் இருக்கும்பொழுது இந்த பூஜையைச் செய்யக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

எம்.அசோக்ராஜா

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பிரார்த்தனை பரிகாரத் தலங்கள்!

0
- டி.ஜெயலட்சுமி பூர்வஜென்ம தோஷ நிவர்த்தி வழிபாடு! சென்னை, தங்கசாலையையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையையும் இணைக்கும் இடத்தில் உள்ளது சின்னக்கடை மாரியம்மன் என்ற ரேணுகா தேவி ஆலயம். இந்தக் கோயில் சுமார் 250 ஆண்டுகளுக்கு...

தச சாந்தி கர்மாக்கள்!

0
- ச.தண்டபாணி இந்து சமயத்தில் பிறந்த ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கையில் பிறந்ததிலிருந்து வாழ்நாள் முழுவதும் (நூறு வயது வரை வாழ்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால்) செய்துகொள்ள வேண்டிய சாந்தி கர்மாக்கள் என்னென்ன என்பதைக் குறித்துக் காண்போம். பொதுவாக,...

பரிகாரங்கள் பத்து!

0
- அபர்ணா சுப்ரமணியம் புற்றுநோயை குணமாக்கும் தல விருட்சம்! திருப்பராய்த்துறை மூலவர் பராய்த்துறைநாதர் அமர்ந்துள்ள கருவறைக்குப் பின்புறம் பராய் மரம் உள்ளது. புற்று நோய் மற்றும் எளிதில் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமைதோறும் இந்த...

உயிரோடிருந்தால் சுகிக்கலாம்!

- ராஜி ரகுநாதன் ‘ஜீவன் பத்ராணி பஸ்யந்து’ என்கிறது வால்மீகி ராமாயணம். ‘உயிரோடிருந்தால் சுகங்களைப் பார்க்கலாம்’ என்பது இதன் பொருள். ஸ்ரீமத் ராமாயணம் சுந்தர காண்டத்திலுள்ள வாக்கியம் இது. அவநம்பிக்கையையும் ஊக்கமின்மையையும் நம் சனாதன தர்மம்...

கேட்டேன்; ரசித்தேன்!

0
​பணிவு தண்ணீர் இறைக்கும் ஏற்றம் பணிவதனால்தான் கிணற்றிலுள்ள நீரை முகர்கிறது. அதுபோல், ஆன்றோர்களிடம் பணிந்தால் அவர்களிடம் தேங்கிக்கிடக்கும் அறிவு வெள்ளத்தை நாம் முகர்ந்து கொள்ளலாம். ​கூப்பிடும் தொலைவும்; எட்டிய தொலைவும்! கஜேந்திரன் மகாவிஷ்ணுவை நினைத்துக் கூப்பிட்டான். உடனே...