0,00 INR

No products in the cart.

பெருமைமிகு பங்குனி உத்திரம்!

கவிதா பாலாஜிகணேஷ்

மிழ் மாதத்தில் வரும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் பெருமை சேர்க்கும் விதமாக விழாக்கள் எடுப்பது நமது மரபு. நட்சத்திரங்கள் இருபத்தியேழில் மற்றவைக்கு இல்லாத சிறப்பு பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு உண்டு. இந்த பங்குனி உத்திர நாளில்தான் பெரும்பாலான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றதாகப் புராணங்கள் சொல்கின்றன. ஆகையால்தான் பங்குனி மாதம் இறை வழிபாட்டுக்குரியதாகிறது. மேலும், இம்மாதத்தை, ‘தெய்வ மாதம்’ என்றே பக்தர்கள் போற்றுகின்றனர்.

தமிழ் வருட மாதங்களில் பன்னிரெண்டாவதாக வருவது பங்குனி. இருபத்தியேழு நட்சத்திரங்களில் பன்னிரெண்டாவது நட்சத்திரம் உத்திரம். இவை இரண்டும் இணையும் தினமே பங்குனி உத்திர நன்னாளாகக் கொண்டாடப்படுகிறது. அதனால்தான் இன்றைய தினம் பன்னிருகை வேலவனாம் முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபடப்படுகிறது.

னி, கடவுளர்களோடு நெருக்கமான தொடர்புடைய இந்த பங்குனி உத்திர நன்னாளில் நடைபெற்ற சில விசேஷங்களைக் காண்போம்.

சிவனும் பார்வதியும், சோமசுந்தரர் மீனாட்சி என்று திருநாமம் தாங்கி மணம் புரிந்தது பங்குனி உத்திர திருநாளாகும். ஈசனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால், கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதலாக, சிவபெருமான் பார்வதி தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.

பங்குனி உத்திர திருக்கல்யாணத் திருவிழா, பசுவாகிய ஆன்மா, பதியாகிய சிவத்துடன் இணைவதான ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு விரதம் அனுஷ்டிப்பர். இது, ‘கல்யாணசுந்தர விரதம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

மகாவிஷ்ணுவை நோக்கிக் கடும் தவமியற்றிய மகாலக்ஷ்மி தாயாரின் பக்தியை மெச்சி, தாயாருக்குத் தமது திருமார்பில் வீற்றிருக்கும் வரத்தை பெருமாள் தந்தருளிய தினம் பங்குனி உத்திர நன்னாள் என்கிறது ஸ்ரீ விஷ்ணு புராணம். திருவரங்கநாதர்,
ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன.

முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் புரிந்து கொண்டது பங்குனி உத்திர நன்னாளில்தான். அதேபோல், ஸ்ரீ வள்ளி அவதரித்த நாளும் பங்குனி உத்திரம் என்கிறது புராணம்.

தேவர்களின் தலைவன் என்று போற்றப்படுகிற தேவேந்திரன் இந்திராணி திருமணம் நடைபெற்றது பங்குனி உத்திர நன்னாளில்தான். நவக்கிரகங்களில் ஒருவரான சந்திர பகவான், அழகும் திறமையும் கொண்ட இருபத்தியேழு நட்சத்திரக் கன்னியரை மணந்தது பங்குனி உத்திர நாளில்தான்.

ஸ்ரீராமபிரான் சீதாதேவி, பரதன் மாண்டவி, லட்சுமணன் ஊர்மிளை,
சத்ருக்னன் ச்ருதகீர்த்தி ஆகியோரின் திருமணங்கள் நடைபெற்ற நன்னாள் பங்குனி உத்திரம்.

படைப்புக் கடவுளான பிரம்ம தேவன், தமது நாவில் ஸ்ரீ சரஸ்வதி தேவியை அமர்த்திக் கொண்டது பங்குனி உத்திர நாளில்தான்! சபரிமலை சாஸ்தா ஸ்ரீ ஐயப்பன் அவதாரம் நிகழ்ந்ததும் பங்குனி உத்திர நன்னாளில்தான் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

மங்கல மாதமான பங்குனி உத்திர நாளில் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதேபோல், பெரும்பாலான ஆலயங்களில் இன்று
சுவாமி
அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறும். பல திருக்கோயில்களில் பங்குனி உத்திரம், பத்து நாள் திருவிழாவாக கோலாகலமாக கொண்டாடப்படும்.

உரிய வயதாகியும் திருமணம் தடைபடுவோர் இத்தினத்தில் சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. அதேபோல், இன்று தம்பதி சமேதராக விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நீண்ட நாள் ஒற்றுமையுடன் வாழலாம். எவர் ஒருவர் தொடர்ந்து 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் கடைபிடிக்கிறாரோ அவரது மறுபிறவி தெய்வப் பிறவியாக அமையும் என்பது ஐதீகம். அதோடு, அவர் பிறப்பு சுழற்சியிலிருந்து விடுபட்டு, மோட்ச நிலையை அடைவர் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

பங்குனி உத்திர நன்னாளில் (18.3.2022) அருகில் உள்ள திருக்கோயில்களுக்குச் சென்று சுவாமியை வழிபடுவோம். அன்றைய தினம் சுவாமி பூஜைக்குரிய பொருட்களோடு, முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்களையும், மகாலக்ஷ்மி தாயாருக்கு வாசமுள்ள வெண்மை நிறமுள்ள மலர்களையும், சிவபெருமானுக்கு வில்வமும் வழங்கி கடவுள் அருளுக்குப் பாத்திரமாவோம். அதோடு, சுவாமி அம்பாள் திருக்கல்யாணங்களை தரிசித்து அருள் பெறுவோம்.

Kavithabalajiganesh B
பா. கவிதாபாலாஜிகணேஷ் " கல்கி குழுமம்தான் என் எழுத்துக்கு முதன்முதலாக அங்கீகாரம் கொடுத்தது நான் அதை நன்றியுடன் என்றும் நினைக்கிறேன் " என்று கூறும் கவிதா, பாலாஜி கணேஷ் அவர்களின் மனைவி, எனக்கு 1999 திருமணம் நடந்தது. திருமணமாகி வந்த உடன் தான் என் கணவர் ஒரு எழுத்தாளர் என்பதே எனக்கு தெரியும். அவர்தான் என்னை ஊக்குவித்து, என்னையும் எழுதும்படி உற்சாகப்படுத்தியவர்’’ என்று பெருமிதத்துடன் பேசும் கவிதா, எதிர்காலத்தில் இன்னும் நிறைய எழுதப் போகிறாராம்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

சொக்கேசன் மண மாட்சி!

0
- பி.என்.பரசுராமன் மதுரை என்றவுடன் உடனே நினைவுக்கு வருவது அன்னை மீனாக்ஷிதான். அதிலும் சித்திரை மாதமெனில், மீனாக்ஷி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் அனைவர் மனதிலும் நிழலாடும். தெய்வத் திருமணம் நடந்த - நடக்கும் அற்புதத் திருத்தலம். சங்கம் வைத்து...

உயிரோடிருந்தால் சுகிக்கலாம்!

- ராஜி ரகுநாதன் ‘ஜீவன் பத்ராணி பஸ்யந்து’ என்கிறது வால்மீகி ராமாயணம். ‘உயிரோடிருந்தால் சுகங்களைப் பார்க்கலாம்’ என்பது இதன் பொருள். ஸ்ரீமத் ராமாயணம் சுந்தர காண்டத்திலுள்ள வாக்கியம் இது. அவநம்பிக்கையையும் ஊக்கமின்மையையும் நம் சனாதன தர்மம்...

கேட்டேன்; ரசித்தேன்!

0
​பணிவு தண்ணீர் இறைக்கும் ஏற்றம் பணிவதனால்தான் கிணற்றிலுள்ள நீரை முகர்கிறது. அதுபோல், ஆன்றோர்களிடம் பணிந்தால் அவர்களிடம் தேங்கிக்கிடக்கும் அறிவு வெள்ளத்தை நாம் முகர்ந்து கொள்ளலாம். ​கூப்பிடும் தொலைவும்; எட்டிய தொலைவும்! கஜேந்திரன் மகாவிஷ்ணுவை நினைத்துக் கூப்பிட்டான். உடனே...

அஷ்டாம்ச ஆஞ்சனேயர்!

- எ.எஸ்.கோவிந்தராஜன் வாயு புத்திரரான ஆஞ்சனேயர் எட்டு விதமான சிறப்பு அம்சங்களைக் கொண்டவர் என்பதால் இவர், ‘அஷ்டாம்ச ஆஞ்சனேயர்’ என அழைக்கப்படுகிறார். வழிபடும் பக்தர்களுக்கு வாழ்வில் வளம் தரும் அந்த எட்டு விதமான அம்சங்கள்...

புண்ணிய தீர்த்தப் பலன்கள்!

0
- எஸ்.ஆர்.எஸ்.ரெங்கராஜன் lகாசி விஸ்வநாதர் ஆலயத்தில், ஈசான ருத்திரரின் சூலாயுதத்தால் உருவாக்கப்பட்ட, ‘ஞான வாவி’ எனும் கிணறு உள்ளது. இதில் நீராட, ஞானம் கிட்டும். lகாசி கங்கைக்கரையில் உள்ள 64 தீர்த்தக் கட்டங்களில் மணிகர்ணிகா கட்டத்தில்...