0,00 INR

No products in the cart.

பதஞ்சலியார் உபதேசம்!

– ரேவதி பாலு

திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி… இதெல்லாம் நாம் கேள்விப்பட்டிருப்பவை. ஆனால், தரிசித்தாலே முக்தி தரும் திருத்தலம் நடராஜப்பெருமான் அருளும் தில்லையம்பதியாகிய சிதம்பரம். அப்படி ஒரு வாக்கு ஸ்ரீ மஹாவிஷ்ணு அருளி,
அதை சாத்தியப்படுத்திய நிகழ்வு மிகவும் ஆச்சரியமானது.

ஒருமுறை பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த மஹாவிஷ்ணுவின் திரு உடல் திடீரென்று கனக்க ஆரம்பித்ததை கவனித்தார், அவரைச் சுமந்து கொண்டிருந்த ஆதிசேஷன். அவர் முகத்தில் எல்லையில்லா ஆனந்தப் பரவசம். உடம்போ ஆனந்தத்தால் துள்ளுகிறது. வியந்துபோன ஆதிசேஷன் இதன் காரணத்தை பகவானிடம் கேட்கிறார்.

அப்போது, ஸ்ரீ விஷ்ணு பகவான் தனது மூச்சுக் காற்று உள்ளே போனபோதும், வெளியே வந்தபோதும் தான் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்டு ரசித்ததாகக் கூறினார். உடனே ஆதிசேஷனுக்கும் சிவதாண்டவத்தைக் காண ஆவல் மேலிட, மஹாவிஷ்ணுவிடம் தனக்கும் அதைக் காண்பிக்கும்படி விண்ணப்பித்துக் கொண்டார். மஹாவிஷ்ணு புன்முறுவல் பூக்கிறார். அந்த ஒரு கணத்திற்காகத்தானே பகவான் காத்துக் கொண்டிருந்தார்? உடனே மஹாவிஷ்ணு அவரை பூலோகத்தில் சிதம்பரம் திருத்தலத்தில் ஸ்ரீ நடராஜப் பெருமானின் கோயிலுக்குப் போகுமாறு பணிக்கிறார்.

வ்வாறே ஆதிசேஷன் பூலோகத்தில் பதஞ்சலியாக அத்ரி மகரிஷிக்கும் அனுசூயைக்கும் பங்குனி மாதம் மூல நட்சத்திரத்தில் மகனாகப் பிறக்கிறார். அவர் ஆசைப்பட்டு ஜன்மம் எடுத்தது நடராஜரின் தாண்டவம் பார்ப்பதற்காக. அந்த ஆசை பரிபூரணமாக நிறைவேறிற்று. நடராஜரை சதாசர்வ காலமும் தரிசனம் செய்து அவருடைய அத்யந்த பக்தர்களில் ஒருவராகி விட்டார். இவருடைய ஆசை நிறைவேற இவரை பூலோகத்திற்கு அனுப்பி வைத்த ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்கு இவர் மூலமாக உலகத்திற்கே உபகாரமாக ஒரு அறிவுப் பணியும் நடக்க வேண்டும் என்பதும் எண்ணமாக இருந்தது. அதுவும் அற்புதமாக நிறைவேறியது. பதஞ்சலி முனிவர் தேவ பாஷைக்கு வியாகரண பாஷ்யம் எழுதினார்.

பதஞ்சலி முனிவர் ஆதிசேஷனின் அவதாரம் என்பதைக் குறிப்பிடும் வகையில்,
இவர் மனித முகத்துடனும் பாம்பு உடலுடனும் பிறந்தார். ஆதிசேஷனுக்கு ஆயிரம் தலைகள். இவருடைய மூச்சுக்காற்று பட்டாலே எதிராளி சாம்பலாகி விடுவார். எனவே, சீடர்களுக்கு இவர் அசரீரியாகவேதான் உபதேசம் செய்வார்.

இவர் இயற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலை தன்னுடைய சீடர்களுக்கு தில்லை அம்பலத்தானின் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து நேருக்கு நேராய் உபதேசிக்க எண்ணுகிறார். சீடர்கள் ஆயிரம் பேர் சேர்ந்து விட்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இந்த வியாகரண மஹாபாஷ்யத்தை தனிப்பட்ட கவனம் செலுத்தி போதிக்க எண்ணிய பதஞ்சலி, ஆதிசேஷ அவதாரத்திலேயே ஆயிரம் சிரங்களுடன் அவர்கள் எதிரே அமரத் திட்டமிடுகிறார். அதே சமயத்தில்,
தன் மூச்சுக்காற்று பட்டால் சீடர்கள் தாங்க மாட்டார்கள் என்பதால் தனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு கனத்த திரையை தொங்க விடுகிறார். ‘எக்காரணத்தைக் கொண்டும் அந்தத் திரையை யாரும் விலக்கக் கூடாதெ’ன்று கட்டளையிடுகிறார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாட்களாக அசரீரியாகக் கேட்ட குருவின் குரலை இப்பொழுது நேரிலேயே கேட்கப் போகிறார்களே?

ஆயிரம் சீடர்களும் மிகுந்த ஆவலோடு குரு கட்டியிருக்கும் திரைக்கு எதிரே உட்கார்ந்து கொள்கிறார்கள். திரையை எக்காரணம் கொண்டும் யாரும் விலக்கிப் பார்க்கக் கூடாது என்றும் அந்த இடத்தை விட்டு யாரும் நகரக் கூடாது என்றும் உத்திரவு போட்டிருந்தார். ஏனென்றால், தன் மூச்சுக் காற்றை, அந்த அக்னி ஜ்வாலையை யாராலும் தாங்க முடியாது என்பதால். ஒரு நாள் கௌடபாதர் என்னும் சீடர் மட்டும் இயற்கை அழைப்பை ஏற்று வெளியே சென்று விடுகிறார். அன்று மற்றொரு சீடன் குருவைப் பார்க்கும் ஆர்வ மிகுதியால் சட்டென்று திரையை விலக்கிப் பார்த்து விட்டான். அவ்வளவுதான்… ஆதிசேஷ ஸ்வரூபத்துடன் ஆயிரம் சிரசுடன் இருந்த பதஞ்சலி முனிவரின் ஜ்வாலாமயமான த்ருஷ்டியும் விஷஸ்வாசமும் பட்டு சீடர்கள் அனைவரும் பஸ்மமாகி விட்டனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஆயிரம் சீடர்களும் பஸ்மமாகாமல் அன்று வகுப்பை விட்டு வெளியேறிய ஒரே ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். அவர்தான் கௌடபாதர். மற்ற சீடர்களின் மறைவுக்கு வருந்தினாலும், ஒருவாறு மனம் தேறி மானிட உருவத்திற்கு மாறி, கௌடபாதரை அழைத்து அவருக்கு வியாகரண சூத்திரத்தை உபதேசம் செய்கிறார் பதஞ்சலியார்.

சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை தரிசிக்க வியாக்ரபாத முனிவரும் தில்லையம்பதிக்கு வருகிறார். இவர் மனித உடலும் புலிக்கால்களும் பெற்றவர். புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட்டார். இருவருமாக வருடக்கணக்கில் தவமிருந்து காத்திருந்தபோது ஒரு தை மாதப் பௌர்ணமி பூச நன்னாளில் சிவபெருமான் நடராஜராக ஆனந்தத் தாண்டவம் புரிந்து இருவருக்கும் காட்சியளித்தார். அன்று பாற்கடலில் ஆதிசேஷனாகிய தன் மேல் சயனித்துக் கொண்டிருந்த ஸ்ரீ விஷ்ணு பகவான் கண்டு களித்த ஆனந்தத் தாண்டவக் காட்சியைத் தானும் கண்டு பேருவகை கொண்டார் பதஞ்சலியார்.

பதினெட்டு சித்தர்களில் ஒருவராக பதஞ்சலி முனிவர் பிரசித்தி பெற்றபோதிலும், யோக சூத்திரங்களில் வல்லவராக அறியப்பட்டபோதிலும், இவருடைய அவதார நோக்கத்தில் மற்றொரு காரணமும் இருக்கிறது. அது சிதம்பரத்தில் நடராஜப் பெருமானாக அருள்பாலிக்கும் சிவபெருமானின் தரிசனப் பெருமையை இந்த தரணி அறியச் செய்ய வேண்டும் என்பதேயாகும். மகத்துவம் பொருந்திய பதஞ்சலி முனிவரை,

‘ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே
சப்தரிஷி மண்டலத்தில் பிரகாசிப்பவரே
பக்தியுடன் வணங்கும் எமக்கு
நல்லாசி தர வேண்டும் பதஞ்சலியாரே!’

எனும் தியானச் செய்யுளைக் கூறி வணங்கி அருள் பெறுவோம்.

ரேவதி பாலு
ரேவதி பாலு, பி.எஸ். என். எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முப்பத்தைந்து வருடங்களாக எழுதி வருகிறார். தமிழில் வெளியாகும் வார, மாதப் பத்திரிகைகளில் இவருடைய படைப்புகள் வெளியாகி வருகின்றன. சிறுகதை, குறுநாவல், நாடகம் என்று பத்திரிகைகள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றவர். இலக்கிய சிந்தனை அமைப்பு நடத்தும் மாதாந்திர சிறந்த சிறுகதைக்கான பரிசு இருமுறை கிடைத்திருக்கிறது. சென்னை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவருடைய நாடகங்கள் ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன;. இதுவரை ஏழு சிறுகதை தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிக கட்டுரை தொகுப்பு நூல்கள் மற்றும் ஒரு சமூக கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகி இருக்கிறது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பௌர்ணமியில் அம்பிகை பூஜை!

2
- பொ.பாலாஜிகணேஷ் முழு நிலவு காணும் பௌர்ணமி தினங்களில் அம்பிகையை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது என்று சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீ சக்ர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு நித்யைகளாக மகா...

வெற்றிக்கு வித்திட்ட பணிவு!

1
- ஜி.குமார் விடிந்தால் இன்றும் யுத்தம். ராவணனின் புதல்வன் மேக்நாத்தை லக்குவணன் நேருக்குநேர் இன்று சந்திக்க வேண்டும். இதுவரை மேக்நாத் யாராலும் தோற்கடிக்கப்படவில்லை. கும்பகர்ணன் வீழ்ந்தாலும் இந்திரனையும் வென்ற தன் மைந்தன் மேக்நாத்தின் பராக்கிரமத்தை...

சுபகிருது தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

0
கணிப்பு : கி.சுப்பிரமணியன் (8610023308) பொதுப்பலன்கள் தமிழ் புத்தாண்டு சுபகிருது வருஷம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி 2022 அன்று சுக்ரனுடைய பூர நட்சத்திரத்தில் தொடங்குகிறது. சுபகிருது என்று சொன்னால் எல்லோருக்கும் நல்ல சுபத்துவத்தைக் கொடுக்கக்கூடிய ஆண்டு...

பரிகாரங்கள் பத்து!

0
- அபர்ணா சுப்ரமணியம் புற்றுநோயை குணமாக்கும் தல விருட்சம்! திருப்பராய்த்துறை மூலவர் பராய்த்துறைநாதர் அமர்ந்துள்ள கருவறைக்குப் பின்புறம் பராய் மரம் உள்ளது. புற்று நோய் மற்றும் எளிதில் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமைதோறும் இந்த...

படித்தேன்; ரசித்தேன்!

0
வலிமை பெற்ற மனம்! எண்ணங்களின் குவியலே மனம். எண்ணங்களிலிருந்து விடுதலைப்பட்ட மனமே வலிமை ஆனது. மனம் அலைபாயும்போது சக்தியானது எண்ணத்தினால் சிதறிப்போய் பலவீனமடைகிறது. மனம் ஒரே எண்ணத்தோடு இருக்கும்போதுதான் சக்தி சேமிக்கப்படுகிறது. மனமும் வலிமை...