0,00 INR

No products in the cart.

கதம்பமாலை

தொகுப்பு : நெ.இராமன்

சனி பகவானுக்கு பாகற்காய் மாலை!

வேலூர் மாவட்டம், வன்னிவேடு அகத்தீஸ்வரர் ஆலயத்தில் சனி பகவானுக்கு 17 பாகற்காய்களை மாலையாகக் கோர்த்து சாத்தி வழிபடுகின்றனர். அதனால் வீடு கட்ட ஏற்படும் தடைகள் விலகுவதாக நம்பிக்கை உள்ளது.

பெண் வடிவில் முருகன்!

கோவை-சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ளது சீரவை என்ற திருத்தலம். இங்கு முருகப்பெருமான் திருத்தண்டு ஊன்றிய கோலத்தில் காட்சி தருகிறார். திருவிழா காலங்களில் முருகப்பெருமானுக்கு வேடுவக் கோலம், ராஜ அலங்காரம் செய்யப்படுகிறது. அத்துடன் வித்தியாசமாக பெண் வடிவத்திலும் முருகப்பெருமானை அலங்கரித்து வழிபாடு செய்கின்றனர்.

லிங்கத்துக்குள் அம்பாள்!

விழுப்புரத்தை அடுத்த ரிஷிவந்தியத்தில் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவரான சிவலிங்கத்துக்கு தேனபிஷேகம் செய்யப்படும்போது, லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால் அம்மன் தன் கையில் கிளியை வைத்துக்கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகவே காட்சியளிக்கும்.

அம்பிகை ஒட்டியாணத்தில் கேது!

காளஹஸ்தியில் அம்பிகை ஞானபிரசூனாம்பிகையின் ஒட்டியாணத்தில் கேது உருவம் காணப்படுகிறது. கேது பகவானை இங்கு அன்னை தன் பிடியில் வைத்திருப்பதாக ஐதீகம். எனவே, காளத்தி அம்பாளை வழிபட்டால் கேது தோஷம் நீங்கும்.

வைணவத் தலத்தில் குரு!

துரை மாவட்டம், சோழவந்தான் அருகே அமைந்துள்ள குருவித்துறையில் சித்திர ரத வல்லபப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 1500 வருடங்கள் பழைமையான இத்தலத்தில் வியாழ (குரு) பகவான் சுயம்பு மூர்த்தியாக தனி சன்னிதியில் வீற்றிருந்து, நாராயணனை நோக்கி தவம் செய்கிறார். வைணவத் தலம் ஒன்றில் குரு பகவான் காட்சியளிப்பது விசேஷ அம்சமாகும்.

சிம்ம குரு தட்சிணாமூர்த்தி!

செங்கல்பட்டுக்கு அருகே, உத்திரமேரூருக்கும் காஞ்சிபுரத்திற்கும் அருகே உள்ளது திருப்புலிவனம் ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் மூன்றாவது பிராகாரத்தில் வீற்றிருக்கும் தட்சிணா மூர்த்தி ஒரு காதில் குண்டலமும், மறு காதில் தோடும் அணிந்து சிவசக்தி வடிவமாகக் காட்சியளிக்கிறார்.

இந்த தட்சிணாமூர்த்தியின் இடது கால் சிம்ம வாகனத்தின் மீதும், வலது கால் முயலகன் மீதும் ஊன்றியபடி காணப்படுகிறது. தட்சிணாமூர்த்தியின் அருகில் சனாகதி முனிவர்களும், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்கள் தங்கள் துணைவியருடனும் இருப்பது போன்ற அமைப்பு காணப்படுகிறது. இது வேறெங்கும் காண முடியாத ஓர் அம்சமாகும். அதனால் இத்தல குருவிற்கு, ‘சிம்ம குரு தட்சிணா மூர்த்தி’ என்றே பெயர். சிம்ம ராசிக்காரர்களுக்கு பரிகாரத் தலமாகவும் இது விளங்கி வருகிறது.

நெஞ்சில் வாழும் நாச்சியார்!

வ திருப்பதிகளில் ஒன்றான திருக்குளந்தை (பெருங்குளம்) திவ்ய தேசத்தில் பெருமாளுக்கு வழக்கமாக உள்ள ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி தவிர, பெருமாளின் நெஞ்சத் தாமரயில் கமலா தேவி என்றொரு நாச்சியாரும் இடம் பெற்றுள்ளார்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாழவைக்கும் வைத்திய நரசிம்மர்!

0
- ராமசுப்பு ‘ஸ்ரீ நரசிம்மர்’ என்ற சிங்கமுக அவதாரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. பிறப்பின்றி ஒரு நொடிப்பொழுதினிலே தனது பக்தன் பிரஹலாதனைக் காப்பாற்றவும், அதேசமயம் ‘பகவான் விஷ்ணு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து இருக்கிறார்’ என்று...

நலம் பெருக்கும் நவநாயகர்!

- கே.சூரியோதயன் சூரியன் காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்ம ராசிக்கு அதிபதி. நவக்கிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர். திக்கு - கிழக்கு, அதிதேவதை - அக்னி, ப்ரத்யதி தேவதை - ருத்திரன்,...

வாழ்வைக் கடைத்தேற்றும் பஞ்ச நாமங்கள்!

- எ.எஸ்.கோவிந்தராஜன் ‘மனிதன் தம்மை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்க மாட்டானா?’ என கடவுள் ஆவலோடு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாராம். அப்படி நாம் கடவுளை நோக்கிச் செல்வதற்கான முதல் படி அவனது திருநாமங்களை உச்சரிப்பதுதான்....

பிரார்த்தனை பரிகாரத் தலங்கள்!

0
- டி.ஜெயலட்சுமி பூர்வஜென்ம தோஷ நிவர்த்தி வழிபாடு! சென்னை, தங்கசாலையையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையையும் இணைக்கும் இடத்தில் உள்ளது சின்னக்கடை மாரியம்மன் என்ற ரேணுகா தேவி ஆலயம். இந்தக் கோயில் சுமார் 250 ஆண்டுகளுக்கு...

வைகுந்தத்துக்கு வழிகாட்டிய வள்ளல்!

1
- ஆர்.வி.பதி ‘வைணவ சம்பிரதாயத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு கூடாது. வைணவன் என்பவன் பெருமாளுக்கு சேவை செய்பவன்’ என்பது ஸ்ரீ ராமானுஜரின் கருத்து. இந்தக் கருத்தினை தனது வாழ்வில் பல செயல்களின் மூலம்...