0,00 INR

No products in the cart.

கேள்வி நேரம்

– ஞானகுரு

வேள்விகளைச் செய்வதால் வினைகள் தீர்ந்து விடுமா?

– கே.சிவசண்முகம், செம்பாக்கம்

இந்த பூமியில் வாழும் மனிதர்கள் பஞ்சபூதங்களை வணங்கினால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நமது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். யக்ஞத்தால் வளம் பெற முடியும் என்பதால் இதை,’கர்ம பூமி, யக்ஞ பூமி’ என்று வேதம் உயர்வாகச் சொல்கிறது. இன்றைய காலகட்டத்தில் வேள்விகள் பல செய்வதாகச் சொல்லிக்கொண்டு பொது இடங்களில் ஆடம்பரமாகச் செய்து தவறான மந்திரங்களை சொல்கின்றனர்.

வேள்விகளில் ஒரு கேள்வி ஞானம் வேண்டும். அங்கேதான் வெற்றி கிடைத்து நிலைக்கும், நம்பிக்கை வைத்தால் வினைகள் தீர்ந்துவிடும். எல்லா வேள்விகளுக்கும் கடைசியில், ‘ஜயாதி ஷோமம்’ என்று ஒன்று இருக்கிறது. அதில் வெற்றி எனக்குக் கிடைக்கட்டும் என்று பிரார்த்தனை செய்யப்படுகிறது.

‘சித்தம் என் வசமாக இருக்கட்டும். சித்தத்தின் அதிஷ்டான தேவதைக்கு இந்த ஆஹுதி நன்கு அளிக்கப்பட்டதாக இருக்கட்டும். பஞ்சபூதங்களுக்கான அதிபதி என்னைக் காப்பாற்றட்டும். ஞானவிருத்திகரமானதும் மங்களகரமானதும் இங்கே செய்யப்பட்டு தேவர்களைக் கூவி அழைப்பதுமான இந்த மகாவேள்வி எனக்கு மங்களங்களைத் தரட்டும்’ என்று பிரார்த்திப்பதால் வேள்விகள் நம்வினைகளைத் தீர்த்துவிட பலத்தைப் பெறுகின்றன.

தெய்வங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் மலர்களில், தவறாக ஒரு கார மலரைச் சேர்த்துவிட்டால் பூஜா பலன் கிடைக்காதா?

– பொ.மரகதவல்லி, திருச்சி

நமக்குத் தெரியாமல் அந்த மலர் சேர்த்துவிட்டால் பாவம் கிடையாது. பூஜைக்கு உதவாத மலர்கள் கள்ளி, ஊமத்தம், விஷக்கள்ளி, நீல கனகாம்பரம், செண்டி, ஆமணக்கு, காட்டாமணி ஆகியன. மலர்களைச் செடியிலிருந்து பறிக்கும்போது நம்மை அறியாமல் சில கார மலர்கள் கலந்துவிட வாய்ப்பு இருக்கிறது. முடிந்தவரை பூஜைக்கு மலர் பறிக்கும் சமயம் யாரிடமும் பேச்சுக் கொடுக்காமல், கவனத்தை சிதற விடாமல் இருத்தல் வேண்டும். பூக்களைப் பறிக்கும்போது இறைவனது நாமங்களையோ, திருப்பதிகங்களையோ சொல்லி துதிக்க வேண்டும். அப்போது அந்த மலர்களுக்கு தெய்வ சக்தி உருவாகும் என்பது சான்றோர் வாக்கு, கார மலர் என்பது அதன் குணத்தைக் குறித்துச் சொல்லப்படுவது, நவ புஷ்பங்கள் வரிசையில் தெய்வங்களுக்குச் சக்தி ஊட்டும் மலர்களாக தாமரை, எருக்கு, புரசு, நந்தியாவர்த்தம், மல்லிகை, அரளி, சங்கு மலர், நீலோத்பலம் மஞ்சள் மலர், வெண்தாமரை, விருட்சி, மகிழம், முல்லை, சம்பங்கி, செம்பரத்தை, கொக்கு மந்தாரை, பவளமல்லி, இருவாட்சி, ரோஜா ஆகியனவும் அடங்கும்.

ஜாதகம் இல்லாத பெண்ணுக்குத் திருமணம் செய்ய தீர்வு என்ன?

– ஏ.லலிதா பரமேஸ்வரி, சென்னை

விநாயகரை துதித்து ஒரு சங்கில் பால் வைத்து பூஜை செய்து அருந்தி வர வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் செய்து அந்தப் பாலை பாதி பிரசாதமாக அருந்திய பிறகு அருகில் உள்ள குளத்தில் விட வேண்டும். அடுத்தகட்டமாகப் பெண்ணின் நாம நட்சத்திரத்தைக் கண்டுபிடிக்க பஞ்சாங்கத்தைக் காண்க. உதாரணமாக, கோகிலா என்ற பெயர் கொண்ட பெண்ணுக்கு நாம நட்சத்திரம் சதயம். இத்துடன் பொருந்தி வரக்கூடிய மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், மகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், ரேவதி ஆகிய நட்சத்திரம் உள்ள ஆண் மகனைத் திருமணம் செய்ய உறுதிப்படுத்தலாம். இப்படி 27 நட்சத்திரங்களையும் பெண்ணின் பெயருக்கு ஏற்றபடி ஜாதகம் இல்லாமல் திருமணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

‘வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவா ளுடையாய் மருகற் பெருமான்
தொழுவா ளிவளைத் துயராக் கினையே.’

‘பலரும் பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
தலரும் படுமோ அடியா ளிவளே.’

இப்பாடலை வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் பூஜை அறையில் தீபம் ஏற்றிக் கூறி வழிபடலாம்.

மோட்சபுரிகள் என்று எந்தத் தலங்களைக் குறிப்பிடுவார்கள்?

– சி.கார்மேகவண்ணன், ஸ்ரீரங்கம்

பாரத தேசத்தில் வைணவத் தலங்கள் நான்கு, விஷ்ணு, ஈசன், அம்பிகை ஆகியோர் சேர்ந்த தலங்கள் இரண்டு, சிவன் உறையும் தலம் ஒன்று என ஏழு தலங்கள், ‘சப்த மோட்சபுரிகள்’ என்று போற்றப்படுகின்றன.ஸ்ரீராமர் பிறந்த இடம் அயோத்தி, கிருஷ்ணர் பிறந்த இடம் மதுரா, ஹரித்வார் மாயக்கிருஷ்ணன் வாழ்ந்த இடம், துவராகை ஆகியன வைணவ மோட்சபுரிகளாகும்.

அடுத்தது, அவந்தி, மகாகாளேஸ்வர், விக்ரமாதித்தனுக்கு காளி தேவி காட்சி கொடுத்து அருள்புரிந்த இடம். இதை உஜ்ஜைனி என்றும் கூறுவர். இது ஒரு சக்தி ஸ்தலம். விஷ்ணு, சிவன், சக்தி ஆகியோர் சேர்ந்து ஒரே தலத்தில் அருள்பாலிக்கும் இடம் காஞ்சிபுரம்.

அடுத்ததாக, விஸ்வேஸ்வரர் அனைவருக்கும் புண்ணியத்தை உபதேசம் செய்த தலம் வாரணாசி என்னும் தலம். சப்த என்றால் ஏழு. ஆகவே, அயோத்தி, மதுரா, மாயா துவாரகை, அவந்தி, காஞ்சிபுரம், வாரணாசி ஆகியவை சப்த மோட்சபுரிகள் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றன. மனிதர்களது வாழ்நாளில் ஒருமுறையாவது இந்தத் தலங்களைத் தரிசித்து இறைவனின் அருளைப் பெற வேண்டும்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாழவைக்கும் வைத்திய நரசிம்மர்!

0
- ராமசுப்பு ‘ஸ்ரீ நரசிம்மர்’ என்ற சிங்கமுக அவதாரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. பிறப்பின்றி ஒரு நொடிப்பொழுதினிலே தனது பக்தன் பிரஹலாதனைக் காப்பாற்றவும், அதேசமயம் ‘பகவான் விஷ்ணு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து இருக்கிறார்’ என்று...

நலம் பெருக்கும் நவநாயகர்!

- கே.சூரியோதயன் சூரியன் காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்ம ராசிக்கு அதிபதி. நவக்கிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர். திக்கு - கிழக்கு, அதிதேவதை - அக்னி, ப்ரத்யதி தேவதை - ருத்திரன்,...

வாழ்வைக் கடைத்தேற்றும் பஞ்ச நாமங்கள்!

- எ.எஸ்.கோவிந்தராஜன் ‘மனிதன் தம்மை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்க மாட்டானா?’ என கடவுள் ஆவலோடு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாராம். அப்படி நாம் கடவுளை நோக்கிச் செல்வதற்கான முதல் படி அவனது திருநாமங்களை உச்சரிப்பதுதான்....

பிரார்த்தனை பரிகாரத் தலங்கள்!

0
- டி.ஜெயலட்சுமி பூர்வஜென்ம தோஷ நிவர்த்தி வழிபாடு! சென்னை, தங்கசாலையையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையையும் இணைக்கும் இடத்தில் உள்ளது சின்னக்கடை மாரியம்மன் என்ற ரேணுகா தேவி ஆலயம். இந்தக் கோயில் சுமார் 250 ஆண்டுகளுக்கு...

வைகுந்தத்துக்கு வழிகாட்டிய வள்ளல்!

1
- ஆர்.வி.பதி ‘வைணவ சம்பிரதாயத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு கூடாது. வைணவன் என்பவன் பெருமாளுக்கு சேவை செய்பவன்’ என்பது ஸ்ரீ ராமானுஜரின் கருத்து. இந்தக் கருத்தினை தனது வாழ்வில் பல செயல்களின் மூலம்...