0,00 INR

No products in the cart.

நேத்ர நாயகியாக அருளும் நைனா தேவி!

7

– ராஜி ராதா

மாசலப் பிரதேசம், பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ளது நைனாதேவி திருக்கோயில்! இக்கோயிலில் குடிகொண்டுள்ள அம்மனை பக்தர்கள், ‘ஸ்ரீ நைனா தேவி’ என பக்தியுடன் அழைக்கின்றனர். மலை ஒன்றின் மீது அமைந்துள்ள இந்தக் கோயிலுக்குச் செல்ல, சற்று சுற்றிச் சுற்றித்தான் மேலே ஏறிச் செல்ல வேண்டும். திருக்கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் அமைந்த கான்க்ரீட் படிகளை ஏறிக் கடந்தால் கோயிலை அடையலாம்! படிகளைச் ஏறிச் செல்லும்போது இருபுறமும் ஏராளமான கடைகளைக் காணலாம். அதைச் சுற்றிலும் அமைந்த இயற்கைக் காட்சிகளும் கண்களுக்கு இனிமையாக உள்ளது. இந்தக் கோயிலுக்குச் செல்ல விஞ்ச் வசதியும் உண்டு. ஆனால். விஞ்ச் வழியாக மேலே செல்ல பிற்பகல் 3.30 மணிக்குள் செல்ல வேண்டும். பக்ராநங்கல் அணை கட்டப்பட்டபோது, இந்தப் பகுதியில் பெரிய ஏரி ஒன்று உருவானது.

வழக்கமான தாட்சாயணி கதையில், அவள் அக்னியில் குதித்துக் கருக, சிவன் அவளைத் துக்கிக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடுகிறார். அதைக் கண்டு மனம் பொறுக்காத மகாவிஷ்ணு தாட்சாயணியை தனது சக்கராயுதத்தால் பல துண்டுகளாக்க, அவற்றில் தாட்சாயணியின் கண்கள் இங்கு விழுந்ததாக கூறப்படுகிறது!

இது தவிர, இன்னும் ஒரு கதையும் கூறப்படுகிறது!

மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன், தனது பசு கூட்டத்திலிருந்து ஒரு பசு மட்டும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஒரு கல்லின் மீது தொடர்ந்து பால் சொரிவதைக் காண்கிறான். அதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்து போன அவனது கனவில் தோன்றிய துர்கை, இந்தக் கல் ஒரு பிண்டி எனவும், இதில் தாம் உறைந்திருப்பதாகவும், இதை அந்நாட்டு ராஜாவிடம் எடுத்துச் சொல்லி, இங்கே ஒரு கோயில் கட்டும்படிக் கூறி மறைந்து விட்டாள்.

அந்த மாடு மேய்க்கும் சிறுவனும் தாம் நேரில் கண்டதையும் கனவில் கண்டதையும் அந்நாட்டு மன்னனிடம் எடுத்துச் சொன்னான். அதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அரசன், அந்த மாடு மேய்க்கும் சிறுவன் குறிப்பிட்ட இடத்தை நேரில் சென்று பார்த்தான். அங்கு நிஜமாகவே ஒரு கல்லுக்கு பசு ஒன்று பால் சொறிவதைக் கண்டான். அதோடு, அந்த பிண்டிக் கல் தெய்வாம்சம் பொருந்தியது என்பதை உணர்ந்து, அதைக் கொண்டு வந்து ஒரு கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து வழிபட்டான். மேலும், அந்தப் பிண்டி கல்லை புடைவையால் அலங்கரித்து, கண்கள் மட்டும் ஜொலிக்கும்படி செய்து வழிபட்டான் என்பதாகச் சொல்லப்படுகிறது இந்த வரலாற்றுக் கதை!

வை தவிர, இக்கோயில் சார்ந்து மற்றுமொரு கதையும் கூறப்படுகிறது. அது, அன்னை துர்கை, மகிஷாசுரனை வதம் செய்தது தொடர்பானது.  அசுரன் மகிஷாசுரன், பிரம்மாவை நோக்கித் தவமிருந்து நூதன வரம் ஒன்றைப் பெற்றிருந்தான். அது, தனக்கு ஒரு இளம் பெண்ணால் மட்டுமே இறப்பு வர வேண்டும் என்பதாகும். வரம் பெற்ற கர்வத்தினால் அவன் தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், மக்கள் என அனைவரையும் துன்புறுத்த ஆரம்பித்தான். இதனால் பெரும் அவதிக்கு ஆளான அனைவரும் அன்னை சக்தி தேவியிடம் முறையிட்டு வழிபட்டனர்! அவர்களின் வேண்டுதலை ஏற்ற பராசக்தி ஓர் அழகிய இளம் பெண்ணாக உருமாறி மகிஷாசுரனை வதம் செய்யப் புறப்பட்டாள்.

தனக்கு எதிரில் ஓர் அழகிய இளம் நிற்பதைக் கண்ட அசுரன், அவளது அழகில் மயங்கி, தன்னை மணக்கும்படி வேண்டினான்! அதற்கு அந்த இளம் பெண், “என்னை நீங்கள் போரில் வென்றால் நான் உங்களை மணப்பேன்” என்று கூறினாள்.  அழகு மோகத்தில் இருந்த அரக்கனும் அதற்கு சம்மதிக்க, இருவருக்கும் இடையே கடும் மோதல் அங்கே ஏற்பட்டது. அந்த சண்டை நெடுநேரம் நீடிக்க, அன்னை துர்கை அவனை தந்திரமாகக் கொல்வதென முடிவெடுத்தாள். அதன்படி அசுரன் மகிஷாசுரனை கொன்றதுடன், தன்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததால் அவனது கண்களைப் பிடுங்கி பழி தீர்த்தாள். இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த தேவர்கள், அன்னையின் மீது பூமாரி பொழிந்து வணங்கினர். அத்துடன், அன்னை சக்தி தேவியை, ‘நைனா ஜி’ என பக்தியுடன் அழைத்து மகிழ்ந்தனர்.

இனி, கோயிலுக்குப் போவோம்…

லயத்தில் நுழைந்தவுடன் பெரிய மண்டபம் ஒன்றைக் காணலாம். அதன் வழியே நீண்ட பாதை வழியாகச் சென்றால் கருவறையை அடையலாம். கருவறையில் பிண்டி ரூபத்தில் அருள்பாலிக்கும் அன்னை துர்கா தேவி, புடைவை, நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு அருள்பாலிக்கிறாள். அன்னையின் கண்கள் மட்டும் பக்தர்களுக்கு நன்கு தெரியும்படி உள்ளது அந்த அலங்காரம். வட நாட்டுக்கே உரிய பளபளப்பு மற்றும் அலங்காரத்துடன் திகழ்கிறாள் அன்னை துர்கை. சுற்றிலும் தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தப்பட்டு ஜொலிக்கிறது. மலை ஏறி வந்த களைப்பு நீங்க நின்று நிதானமாக அன்னையை தரிசிக்கலாம்.

கோயிலுக்கு வெளியே காளி, கணேஷ் மற்றும் பைரல் மகாதேவ் ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் உள்ளன. இவை அனைத்தும் கோயிலின் மேல் தளங்களில் உள்ளதால், ஆர்வம் உள்ளவர்கள் மேலே சென்று தரிசிக்கலாம்! இந்த நைனா தேவி ஆலயத்துக்கு பிரமிட் போன்ற உள் விமானமே அடையாளமாக உள்ளது! மேலும், நைனா ஏரியின் வடமுனையில் இந்த கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1880ல் ஏற்பட்ட கோர மலைச்சரிவினால் இந்தக் கோயில் முற்றிலும் அழிந்துபோனது. தற்போது நாம் தரிசிப்பது அன்னை துர்கா தேவிக்கு புதிதாகக் கட்டப்பட்ட கோயிலைத்தான். கோயிலில் அஷ்டமியின் எட்டு நாட்களும் மற்றும் ஷிரவன் மாதத்தின்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இவை தவிர, நவராத்திரி சமயத்திலும் பக்தர்கள் கூட்டத்துக்கு பஞ்சமில்லை. குறிப்பாக, இக்கோயிலுக்கு ஏராளமான பஞ்சாபியர்கள் வருவது கூடுதல் சிறப்பு.

இந்தக் கோயிலில் ஒரு பெரிய பீப்பல் மரம் (அரச மரம்) உள்ளது. அதில் பக்தர்கள் வேண்டுதலின் பொருட்டு மணிகளைக் காணிக்கைகளைக் கட்டி உள்ளனர். குளிர்காலத்திலும் கூட ஏராளமான பக்தர்கள் இங்கே வருகை தருவது விசேஷம். சிறப்புமிகு விசேஷமாக இக்கோயிலில் வசந்த நவராத்திரி மற்றும் சாரதா நவராத்திரி போன்றவை கடைபிடிக்கப்படுகின்றன. அந்த சமயம் இக்கோயிலில் பெரிய மேளா நடைபெறுகிறது. அச்சமயம் இங்கே லட்சக்கணக்கில் மக்கள் கூடுவது வாடிக்கை. பக்தர்கள் பலரும் வேண்டுதலின் பொருட்டு மலை ஏறி அம்மனை தரிசித்து வழிபடுகின்றனர். மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக இவள் திகழ்வது கண்கூடான உண்மை!

அமைவிடம் : சண்டிகரிலிருந்து 100 கி. மீ., டெல்லியிலிருந்து நேரடி பேருந்து வசதி உண்டு.
தரிசன நேரம் : காலை 6 முதல் இரவு 9 மணி வரை கோயில் நடை திறந்துள்ளது.

(தொடரும்)

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாழவைக்கும் வைத்திய நரசிம்மர்!

0
- ராமசுப்பு ‘ஸ்ரீ நரசிம்மர்’ என்ற சிங்கமுக அவதாரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. பிறப்பின்றி ஒரு நொடிப்பொழுதினிலே தனது பக்தன் பிரஹலாதனைக் காப்பாற்றவும், அதேசமயம் ‘பகவான் விஷ்ணு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து இருக்கிறார்’ என்று...

நலம் பெருக்கும் நவநாயகர்!

- கே.சூரியோதயன் சூரியன் காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்ம ராசிக்கு அதிபதி. நவக்கிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர். திக்கு - கிழக்கு, அதிதேவதை - அக்னி, ப்ரத்யதி தேவதை - ருத்திரன்,...

வாழ்வைக் கடைத்தேற்றும் பஞ்ச நாமங்கள்!

- எ.எஸ்.கோவிந்தராஜன் ‘மனிதன் தம்மை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்க மாட்டானா?’ என கடவுள் ஆவலோடு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாராம். அப்படி நாம் கடவுளை நோக்கிச் செல்வதற்கான முதல் படி அவனது திருநாமங்களை உச்சரிப்பதுதான்....

பிரார்த்தனை பரிகாரத் தலங்கள்!

0
- டி.ஜெயலட்சுமி பூர்வஜென்ம தோஷ நிவர்த்தி வழிபாடு! சென்னை, தங்கசாலையையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையையும் இணைக்கும் இடத்தில் உள்ளது சின்னக்கடை மாரியம்மன் என்ற ரேணுகா தேவி ஆலயம். இந்தக் கோயில் சுமார் 250 ஆண்டுகளுக்கு...

வைகுந்தத்துக்கு வழிகாட்டிய வள்ளல்!

1
- ஆர்.வி.பதி ‘வைணவ சம்பிரதாயத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு கூடாது. வைணவன் என்பவன் பெருமாளுக்கு சேவை செய்பவன்’ என்பது ஸ்ரீ ராமானுஜரின் கருத்து. இந்தக் கருத்தினை தனது வாழ்வில் பல செயல்களின் மூலம்...